twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ்டர் இசை வெளியீட்டு விழா.. அனுமதி மறுப்பு.. சென்னையில இல்லை.. எங்கே தெரியுமா நடக்குது?

    |

    சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னைக்கு பதிலாக வேறு ஒரு நகரத்தில் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Recommended Video

    குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிலிப்பைன்ஸ் ஏர்போர்ட்டில் நடனமாடிய நசிகர்கள் - வைரல் வீடியோ

    சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தை, மாநகரம், கைதி என்ற இரு வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

    தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

    அவர்தான் வேண்டும்.. அதிரடியாக கண்டிசன் போட்ட விஜய்.. தளபதி 65ல் நடக்க போகும் மாபெரும் டிவிஸ்ட்!அவர்தான் வேண்டும்.. அதிரடியாக கண்டிசன் போட்ட விஜய்.. தளபதி 65ல் நடக்க போகும் மாபெரும் டிவிஸ்ட்!

    லிஸ்ட் பெருசு

    லிஸ்ட் பெருசு

    அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தைத் தொடர்ந்து, மாஸ்டர் படத்திலும், நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. விஜய்க்கு வில்லனாக முதன் முறையாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார். மேலும், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், விஜே ரம்யா, செளந்தர்யா, பிரேம் குமார், சேத்தன் என லிஸ்ட் ரொம்ப பெருசு.

    20 மில்லியன்

    காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை நடிகர் விஜய் கலக்கலாக பாடி இருந்தார். அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் தங்க்லீஷ் பாடலாக உருவாகி இருந்த குட்டி ஸ்டோரி பாடல் உலகளவில் டிரெண்டாகி 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    இசை வெளியீடு

    இசை வெளியீடு

    மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு, மாஸ்டர் இசை வெளியீட்டின் மேல் தான். மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருவதால், விரைவில் மாஸ்டர் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    குட்டி கதை

    குட்டி கதை

    மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குட்டி ஸ்டோரி பாடலிலேயே பல விதமான குட்டி கதைகளை படக்குழு உருவாக்கி இருந்தனர். இந்நிலையில், மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில், வருமான வரித்துறை சோதனை குறித்தும், தனது வளர்ச்சியை தடுக்க நினைக்கும் ஹேட்டர்கள் குறித்தும், விஜய் பேசவுள்ள குட்டி கதைக்கு பல பேர் வெயிட்டிங்.

    சென்னையில் இல்லை

    மெர்சல், சர்கார், பிகில் என விஜய் நடித்த பல படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில், நடந்துள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னைக்கு பதிலாக கோவை மாநகரில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாம்.

    கோவையில் தான்

    சென்னையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் தான் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா, நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் கோவையில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சாந்தனு, மாஸ்டர் குழுவுடன் கோவைக்கு வெயிட்டா வறோம் தயாரா இருங்க எனக் கூறியுள்ளார்.

    அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    மேலும், விஜய்யின் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த அனுமதி தரவில்லை என்றும், அதனால், தான் கோவைக்கு இசை வெளியீட்டு விழாவை ஷிஃப்ட் பண்ண படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில், தனது பலத்தை காட்டிய விஜய், கோவையிலும் பெரிய அளவிலான ரசிகர் பலத்தை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகவே அமையும் என தெரிகிறது.

    English summary
    Shanthanu asked the people of Coimbatore to get ready for something big as the 'Master' team is coming to the city for the audio launch of the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X