நகைச்சுவை நடிகரின் கஃபேவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு.. சர்வதேச அளவில் நாசவேலைக்கு திட்டமா?
கனடா: பொதுவாகவே நடிகர்கள் தங்களது பீக் டைமில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு எங்காவது முதலீடு செய்துகொள்வார்கள். காரணம், சினிமா உலகில் யாருக்கு வேண்டுமானாலும் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். சினிமா உலகம் கிட்டத்தட்ட லாட்டரி மாதிரிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். எனவே பல உச்ச நடிகர்கள் தொடங்கி, கடைநிலை டெக்னீசியர்கள் வரை தங்களது வருமானத்தில் கொஞ்சம் மிச்சம் வைத்து ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வார்கள்.
பலர் நிலங்களை வாங்கிக் குவிப்பார்கள், பலர் வீடுகளை, கட்டிடங்களை வாங்கி வாடகைக்கு விடுவார்கள். அப்படி இருக்கும்போது, சில புதிதாக தொழில் தொடங்குவார்கள். உதாரணத்திற்கு நடிகர் சூரி தொடங்கிய ஹோட்டல் போல என்று வைத்துக் கொள்ளலாம். அப்படித்தான் பஞ்சாப்பைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரான கபில் சர்மாவின் கனடாவில் உள்ள கஃபேவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார்கள். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பஞ்சாப்பைச் சேர்ந்த காமெடி நடிகரான கபில் சர்மா, டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இவரது ஸ்டாண்ட்-அப் காமெடிகளுக்கு பஞ்சாப் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவரது கபில் சர்மா ஷோ மற்றும் காமெடி நைட்ஸ் வித் கபில் ஆகிய நிகழ்ச்சிகள் இவருக்கு புகழ் தேடிக் கொடுத்தது. அவர் கனடாவில் கேப்ஸ் கஃபே என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
சராமாரி துப்பாக்கிச் சூடு: இந்த உணவகத்தில் கடந்த 9ஆம் தேதி இரவில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் உணவகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கனடா காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. உணவகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காரில் வந்து, காரில் இருந்தபடியே உணவகத்தை நோக்கி சராமாரியாக சுட்டுள்ளார். அதன் பின்னர் அவர் தப்பி ஓடி உள்ளார். உணவகத்தை நோக்கி மட்டும் 9 முறை சுட்டதாக உணவக ஊழியர்கள் காவல்துறையினரிடமும் ஊடகத்திடமும் தெரிவித்துள்ளார்கள்.

தீவிரவாத தாக்குதல்: இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது தனிநபர் என்ற கோணத்தில் கனடா காவல்துறை விசாரித்து வந்த நிலையில், தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, உணவகத்தின் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இது அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது.
உணவகம் அறிக்கை: இந்நிலையில், கபில் சர்மாவின் கேப்ஸ் கஃபே உணவகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், " வாடிக்கையாளர்களுக்கு சுவையான காபி கொடுக்க மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது நண்பர்களுடன் நிம்மதியாக உரையாடல்கள் நடத்த, அதன் மூலம் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் நம்பிக்கையுடன் நாங்கள் கேப்ஸ் கஃபேவைத் திறந்தோம். எங்களின் இந்த கனவை வன்முறை கொண்டு முடக்க நினைப்பதை நினைத்தால் மனவேதனை அளிக்கிறது. இந்த அதிர்ச்சியை நாங்கள் எதிர்கொள்கிறோம், ஆனால் நாங்கள் இதை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











