ஹெச். வினோத்துக்கு மீண்டும் டாட்டா காட்டிய கமல்.. அடுத்த படம் அந்த இயக்குநர் உடன் தானாம்!

சென்னை: இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசன் எந்த இயக்குநர் படத்தில் இணையப் போகிறார் என்கிற கேள்விக்கு உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 4 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த கமலுக்கு ஒட்டுமொத்த கேப்புக்கும் சேர்த்து வைத்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டே பரிசாக கிடைத்தது.

துணிவு படத்திற்கு பிறகு கமலுக்கு கதை சொல்லி உள்ள ஹெச். வினோத் அவரை வைத்து அடுத்த படத்தை இயக்கி விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இன்னொரு பெரிய இயக்குநர் உடன் கமல் அடுத்ததாக இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்துடன் ஹாட்ரிக்

அஜித்துடன் ஹாட்ரிக்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ஹெச். வினோத் அதன் பின்னர் நடிகர் அஜித் படங்களை இயக்கும் வாய்ப்புகளை வரிசையாக பெற்றார். போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச். வினோத் வலிமை மற்றும் துணிவு என தொடர்ந்து அஜித் உடன் இணைந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தார்.

துணிவு ட்ரோல்

துணிவு ட்ரோல்

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் பீஸ்ட் படம் போலவே ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தன. வங்கியில் நடக்கும் மோசடிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையில் இரண்டாம் பாதியில் வரும் அஜித்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷன் மற்றும் கிளைமேக்ஸில் வரும் அந்த லாஜிக்கில்லாத மிஷின் கன் சண்டைக் காட்சிகள் படத்தை மொத்தமாக கெடுத்து விட்டதாக நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்தனர்.

இனிமே அஜித் படம் பண்ணுவாரா

இனிமே அஜித் படம் பண்ணுவாரா

அஜித்துடன் இணைந்து ஹெச். வினோத் இயக்கிய வலிமை படமே சொதப்பிய நிலையில், துணிவு திரைப்படம் வலிமை படத்தை விடவே பெட்டராக வந்த நிலையில், மீண்டும் அஜித் ஹெச். வினோத் உடன் இணைவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் வேண்டாம் என சொன்ன போது கூட வினோத்தை அஜித் அழைக்கவே இல்லை என்கின்றனர். எதிர்காலத்தில் மீண்டும் இணைவதும் ரொம்பவே சிக்கல் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அடுத்து கமல் படமா

அடுத்து கமல் படமா


இயக்குநர் வினோத் அடுத்ததாக கமல் படம் பண்ணலாமா என்கிற முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், கமல்ஹாசன் தற்போதைக்கு அவர் கையிலே சிக்காமல் எஸ்கேப் ஆகி வருவதாக கூறுகின்றனர். இந்தியன் 2 படத்தில் பிசியாக இருக்கும் கமல் அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இன்னொரு இயக்குநரை டிக் அடித்திருப்பதாக கூறுகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் தான்

மணிரத்னம் இயக்கத்தில் தான்

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு சூப்பரான படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக கூறுகின்றனர். மணிரத்னம் படத்தை முடித்து விட்டுத் தான் ஹெச். வினோத் பக்கம் கமல் வருவார் என்றும் கூறுகின்றனர். அதற்கு நடுவே லோகேஷ் கனகராஜ் விக்ரம் 3 படத்துடன் வந்து விட்டால் அதுவும் கஷ்டம் தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X