மன்னவன் மட்டுமில்ல தலைவர் 168 படத்துக்கு இந்த ஒரு சூப்பர் டைட்டிலும் சிவா மைண்ட்ல இருக்காம்!

சென்னை: தலைவர் 168 படத்துக்கு மன்னவன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில், மேலும், ஒரு டைட்டிலும் சிவா மனதில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் தலைவர் 168 படத்தில் நடித்து வருகின்றனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இமான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

பெரியார் குறித்த சர்ச்சை கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாகவும், சினிமா வேறு, அரசியல் வேறு என்று அதற்கு பதில் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தல – தலைவர்

தல – தலைவர்

கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அடுத்ததாக தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் மெகா பிளாக்பஸ்டர் ஆன நிலையில், அடுத்ததாக சூப்பர்ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு சிவாவுக்கு கிடைத்துள்ளது.

இந்தியன் 2 நடிகர்

இந்தியன் 2 நடிகர்

நியூ இயர் கொண்டாட்டத்திற்கு கூட விடுமுறை அளிக்காமல் தலைவர் 168 படத்தின் வேலைகள் பயங்கர ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வரும் சித்தார்த் தலைவர் 168 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

என்ன ரோல்?

என்ன ரோல்?

தலைவர் 168 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடி இல்லை என்றும், தங்கை கதாபாத்திரம் என்ற தகவல் பரவி வந்த நிலையில், தற்போது, சித்தார்த் தான் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி என்ற தகவலும் வைரலாகி வருகிறது. கமல், ரஜினி என இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களில் சித்தார்த்துக்கு ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

வி என்ற எழுத்துக் கொண்ட டைட்டிலை வைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கும் இயக்குநர் சிவா, இந்த படத்திற்கு வியூகம் என்ற டைட்டில் வைக்கப் போவதாக ஆரம்பத்தில் வதந்திகள் வெளியாகின. ஆனால், தற்போது, மன்னவன் என்ற டைட்டில் தான் தலைவர் 168 படத்துக்கு என அண்மையில் ஒரு தகவல் உலாவி வருகின்றது. இந்நிலையில், நெருங்கிய வட்டாரங்கள் 'அண்ணாத்த' என்ற டைட்டிலும் சிவா மனதில் இருப்பதாக கூறுகின்றனர்.

விரைவில்

விரைவில்

தலைவர் 168 படத்தின் டைட்டில் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் டிவி தொடங்கிய நாள் கொண்டாட்டம் ஆண்டு தோறும் அந்த நாளில் கொண்டாடப்படுவதால், தலைவர் 168 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் அன்றைய தினத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X