மோடிதான் எல்லாம்னு உருட்டாதீங்க.. துரந்தர் படத்தின் ரியல் ஹீரோ இவங்கதான்.. ப்ளூ சட்டை மாறன் தடாலடி

சென்னை: இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகி நடிகர் ரன்வீர் சிங் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் துரந்தர் 2. இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியான துரந்தர் படத்தின் இரண்டாவது பாகம். படம் பலராலும் பாராட்டப்பட்டாலும், படத்தை மிகவும் காத்திரமாக விமர்சிக்கும் பிரபலங்களும் ரசிகர்களும் இருக்கிறார்கள். படத்தை பாராட்டிய பலரும் படத்தின் கிளைமாக்ஸில் வைத்துள்ள டுவிஸ்ட் என்பது யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட். பிரதமர் நரேந்திர மோடி தான் படத்தின் கதாநாயகன் என்று எல்லாம் கருத்து தெரிவித்தார்கள். மேலும் பிரதமர் நரேந்திர மோடி ரெஃபரன்ஸ் என்று, " ஒரு டீ கடைக்காரன்" என்ற வசனம் எல்லாம் இருக்கிறது என்று ரசிகர்கள் இயக்குநரை பாராட்டி வந்தார்கள்.

ஆனால் படத்தின் கதை உண்மையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைப்படத்திற்கான திரைக்கதையை மசாலாவுடன் உருவாக்கினார். ஆனால் படத்திற்கான எடுக்கப்பட்ட உண்மை சம்பவங்களானது, 2014ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்னரே நடைபெற்று விட்டது. ஆனால் படத்தின் கதையில் இயக்குநர் ஆதித்ய தார் தான் ஒரு பாஜக அபிமானி என்று காட்டிக் கொள்ள, பணமதிப்பிழப்புக்கு சப்பைக்கட்டு கட்டும் காட்சிகளையும், இந்திய உளவாளி பாகிஸ்தானுக்குள் நுழைந்து, தீவிரவாதத்தை தடுக்க முயற்சித்த போது பிரேமிலேயே இல்லாத நரேந்திர மோடிக்கு தேவையில்லாத பில்டப் மற்றும் ரெஃபரன்ஸ் சீன்களை வைத்துள்ளனர் என்று விமர்சித்து வருகிறார்கள்.

Blue Sattai Maran Exposes Dhurandhar 2 Reality Indira Gandhi amp amp Manmohan Singh Are the Real Heroes
Photo Credit:

ப்ளூ சட்டை மாறன் விளாசல்: இப்படி இருக்கையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சில தகவல்களைப் பகிர்ந்து துரந்தர் படத்தின் மையக் கதையான உண்மைச் சம்பவத்திற்கு முக்கிய காரணம், மறைந்த முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் தான் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், " நமது நாட்டின் உண்மையான துரந்தர்கள் என்றால் அது இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் தான். இந்த திட்டத்தை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இந்தியாவின் RAW அமைப்பு 1968இல் முதல் முதலாக தொடங்கியது.

ரியல் ஹீரோஸ்: 1981ஆம் ஆண்டு ஜமீல் ஜமாலி அனுப்பப்பட்டார். அவர் அங்கு 45 ஆண்டுகள் லயாரியில் இருந்தார். ஹம்சா கடந்த 2004ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரமராக இருந்த போது லயாரிக்குச் சென்றார். ஹம்சா கதாபாத்திரத்தில் தான் ரன்வீர் சிங் நடித்துள்ளார். இல்யாஸ் காஷ்மீரி மேஜர் இக்பால் 2011ஆம் ஆண்டும், எஸ்.பி சௌத்ரி அஸ்லாம் கடந்த 2014ஆம் ஆண்டு இறந்தனர். அப்போது பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Blue Sattai Maran Exposes Dhurandhar 2 Reality Indira Gandhi amp amp Manmohan Singh Are the Real Heroes

ரசிகர்கள் ஷாக்: இன்னும் சொல்லப்போனால் படம் உண்மைக் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று கூறுப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் உண்மை என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் படத்தின் கிளைமாக்ஸில் வரும் மோடி தொடர்பான காட்சிகளுக்கும் அவருக்கு பில்டப் கொடுக்கும் காட்சிகளுக்கும் உண்மைச் சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிந்து கொண்டவர்கள், ஷாக் ஆகி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X