எனக்கு ஜெயிக்க வேண்டாம்...அதிரடி காட்டும் தாமரை...திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இது முக்கியமான வாரமாக அமைந்துள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளதால், டிக்கெட் டு ஃபினாலேவை வெல்ல போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Recommended Video

Thamarai Selvi Sentiment Drama போடுறாங்க?? | Bigg Boss Tamil

இனி டபுள் எவிக்ஷன் தான் என கமல் கூறி விட்டதால் அடுத்து வெளியேற போகும் அந்த இருவர் யார் என்பது பற்றிய கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. மிக விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி நெருங்கி வருகிறது.

ஃபினாலே டிக்கெட் வாரம்

ஃபினாலே டிக்கெட் வாரம்

இந்நிலையில் நிகழ்ச்சியின் 85வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் ப்ரோமோவில், ஃபினாலே டிக்கெட்டை வெல்ல தகுதி இல்லாத ஒருவரை தேர்வு செய்து வெளியேற்ற வேண்டும் என பிக்பாஸ் சொல்கிறார். இரவு உணவுடன் ஃபினாலே சுற்று இன்று ஆரம்பமாகிறது.

கதவ திறங்க பிக்பாஸ்

கதவ திறங்க பிக்பாஸ்

இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இரண்டாவது ப்ரோமோவில் வழக்கம் போல் நிரூப், பிரியங்கா சண்டை நடக்கிறது. கமல் அவ்வளவு அட்வைஸ் செய்த பிறகும், மீண்டும் கோபப்பட்டு கத்தும் நிரூப், பிக்பாஸ் கதவை திறங்கள். நான் வெளியே போகிறேன் என சொல்கிறார். நான் டிக்கெட் வின் பண்ண கூடாதுன்னு நினைக்கிற ஒன்று அவ இருக்கனும், இல்லைன்னா நான் இருக்கனும் என கோபமாக சொல்கிறார்.

தெரியாமலா விளையாடுறீங்க

தெரியாமலா விளையாடுறீங்க

மூன்றாவது ப்ரோமோவில், யார் ஜெயித்தாலும் எனக்கு சந்தோஷம் என்கிறார் தாமரை. இதனால் கடுப்பாகும் சஞ்சீவ், ஒன்றுமே தெரியாமல் தான் இவ்வளவு நாள் கேம் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மாமியார் பார்த்துக் கொண்டிருக்காரா. இதை நாங்கள் நம்ப வேண்டுமா என கேட்கிறார் தாமரையிடம். தாமரையும், நடந்து கொண்டே பேசாதீர்கள். வாங்க. வந்து உட்காருங்கள் பேசலாம் என கூப்பிடுகிறார்.

எனக்கு ஜெயிக்க வேணாம்

எனக்கு ஜெயிக்க வேணாம்

பிரியங்காவிடமும் மறுபடியும், யார் ஜெயிச்சாலும் எனக்கு சந்தோஷம் தான் என்கிறார் தாமரை. உனக்கு ஜெயிக்கனுமா என்ற பிரியங்காவிடம், மக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என நம்பிக்கையாக சொல்கிறார் தாமரை. கடுப்பாகும் பிரியங்கா, நீ ஜெயிக்கனுமா, வேணாமா என கேட்கிறார். அதற்கு தாமரை அதிரடியாக, எனக்கு ஜெயிக்க வேண்டாம் என்கிறார்.

அப்போ எதுக்கு வந்தீங்க

அப்போ எதுக்கு வந்தீங்க

தாமரை, மற்றவர்களிடம் பேசுவதை ராஜு அதிர்ச்சி கலந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், ராஜு பார்க்கிறதை பார்த்தா கடந்த சீசனில் பாலாஜி சொன்னாரே, சும்மா இருக்குறவங்க தான் டைட்டில் வின் பண்ணுவாங்கன்னு அது தான் இந்த சீசன்லையும் நடக்கும் போல என தெரிவித்துள்ளனர். ஜெயிக்க வேணாம் என நினைப்பவர் எதற்காக பிக்பாசிற்கு வரணும் என தாமரையை கண்டபிடி கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X