அம்மனாக மட்டுமல்ல.. ஹாட்டாகவும் இத்தனை முறை அலறவிட்டுருக்காரு ரம்யா கிருஷ்ணன்!

சென்னை: சாமி படங்களில் அம்மனாகவும், படையப்பா படத்தில் நீலம்பரியாகவும், பாகுபலி படத்தில் ராஜமாதாவாகவும் நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணன் பல படங்களில் ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கும் வந்து கவர்ச்சி பொங்க நடித்திருக்கிறார்.

சிம்புவுடன் குத்து படத்தில் போட்டுத் தாக்கு பாடலில் தொடங்கி, வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம் வரை கிளாமரில் கலக்கி வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

49 வயதாகும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து இந்திய நடிகையாக திகழ்கிறார்.

வெள்ளை மனசு

வெள்ளை மனசு

1984ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு படத்தில் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக தனது 14 வயதில் நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். பின்னர் ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்தவரின் ஜோடியாக நடித்து பிரபலமானார் ரம்யா கிருஷ்ணன். அம்மனாகவும், படையப்பா நீலம்பரியாகவும், பாகுபலி ராஜாமாதாவாகவும் கலக்கிய ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சியிலும் குறை வைக்கவில்லை.

லாலா நந்தலாலா

லாலா நந்தலாலா

இயக்குநர் திருப்பதிசாமி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படம் நரசிம்மா படத்தில், ஓனம் டான்ஸராக படு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை திக்குமுக்காட செய்திருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அம்மன் படங்களில் நடித்து வந்த அவர் திடீரென இப்படி ஒரு பாட்டுக்கு ஆடுகிறாரே என ரசிகர்கள் அப்போதே கமெண்ட்டுகளை பாஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேகி

மேகி

நரசிம்மா படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு கவர்ச்சியாக ஆடிய நடிகை ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ஜெயராம், யூகி சேது, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பஞ்ச தந்திரம் படத்தில் மேகி கதாபாத்திரத்தில் கால் கேர்ளாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதிலும் அந்த "வைராஜா வை.. உன் வலது கையை வை" பாடல் எல்லாம் கவர்ச்சியின் உச்சக்கட்டம்.

தூது வருமா

தூது வருமா

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் அட்டகாசமான போலீஸ் படமாக வெளியான காக்க காக்க படத்தில் கிளப் டான்ஸராக கிழிந்த ஜீன்ஸ், கிராப் டாப் எல்லாம் அணிந்து கொண்டு படு செக்ஸியாக "தூது வருமா தூது வருமா" பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருப்பார்.

போட்டுத் தாக்கு

போட்டுத் தாக்கு

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு சிம்பு, ரம்யா நடிப்பில் வெளியான குத்து படத்தில் "போட்டுத் தாக்கு" பாடலில் செம குத்து குத்தியிருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அப்பவே இந்த வயதில் இன்னாம்மா ஆட்டம் போடுறாரு இவரு என தமிழ் சினிமாவே அசந்து போய் பார்த்தது.

ஆபாச பட நடிகை

ஆபாச பட நடிகை

கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், மிருணாளினி ரவி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா எனும் ஆபாச பட நடிகை கதாபாத்திரத்தில் நடித்து கெத்துக் காட்டியிருப்பார். மற்ற நடிகைகள் நடிக்க பயந்த அந்த கதாபாத்திரத்தை அசால்ட்டாக ஏற்று நடித்திருந்தார்.

பார்ட்டி

பார்ட்டி

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம், ரெஜினா கஸாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன் என நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி உள்ள பார்ட்டி படத்தில் அபிராமி கதாபாத்திரத்தில் செம மாடர்னாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். சூர்யா, கார்த்தி குரலில் பார்ட்டி பாடல் மட்டும் வெளியான நிலையில், ரிலீசாகாமல் அந்த படம் கிடப்பில் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X