லியோவுக்கு ஜெயிலர் மட்டும் போட்டியில்லை.. ஜவான், சலார் படங்களும் கழுத்தை நெறிக்க காத்திருக்கின்றன?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் பல முனை தாக்குதல்களையும் விஜய் சந்திக்க காத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூலை எட்டிய நிலையில், அதனை முந்த வேண்டும் என்கிற மிகப்பெரிய டாஸ்க் மட்டுமின்றி அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்களின் வசூலையும் லியோ முந்துமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 420 கோடி வசூலை கடந்த நிலையில், லியோ திரைப்படமும் எல்சியூவாக அமைந்தால் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய இலக்கு வைத்த ஜெயிலர்: நடிகர் விஜய் நடித்த படங்கள் இதுவரை அதிகபட்சமாக 300 கோடி வசூல் வரை எட்டியுள்ள நிலையில், லியோ படம் 400 கோடி வசூல் செய்தாலே பெரிய சாதனை தான் என்றாலும், ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்கும் என விஜய் ரசிகர்கள் பெரிதும் நம்பி வருவதால் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்க 600 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறது.
ஜவான் வருது: ஜெயிலர் மட்டுமே விஜய்யின் லியோ பாக்ஸ் ஆபிஸுக்கு போட்டியில்லை என்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படம் 1000 கோடி வசூல் செய்தால், அதுவும் லியோ படத்துக்கு கடும் போட்டியாக மாறும் என்கின்றனர்.

சலார் விடும் சவால்: இந்தியளவில் மற்ற நடிகர்கள் வாங்காத அளவுக்கு 200 கோடி சம்பளம் விஜய் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், லியோ படம் சலார் படத்தின் வசூலையும் முறியடிக்கும் என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து உறுதியாக நம்பி வருகின்றனர். கடந்த ஆண்டு விஜய்யின் பீஸ்ட்டுக்கு போட்டியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 2 ரிலீஸ் ஆன நிலையில், பீஸ்ட் வசூல் பாதிப்படைந்தது. அதற்கு பழி தீர்க்கவும் சலார் வசூலை லியோ முந்துமா என்றும் உற்று நோக்கப்படுகிறது.
1000 கோடி வசூல் செய்தால்: இப்படி பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்த முறை விஜய் ரசிகர்கள் நிச்சயமாக விஜய்யின் லியோ படத்தை கைவிட மாட்டார்கள் என்றும் பெரும் போட்டியை சமாளிக்கும் அளவுக்கு லோகேஷ் கனகராஜின் கன்டென்ட் வெயிட்டாக இருந்தால் நிச்சயம் லியோ பந்தயம் அடிப்பது கன்ஃபார்ம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











