லாக்டவுன் லீலைகள்.. கரீனா கபூர் மட்டும் இல்லைங்க.. இத்தனை பிரபலங்கள் கர்ப்பமாக ஆகியிருக்காங்களாம்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் கர்ப்பமான செய்தி நேற்று வெளியாகி வைரலானது.

கொரோனா பரவல் காரணமாக பிரபலங்கள் ஷூட்டிங் இல்லாமல், வீட்டிலேயே இருப்பதால், இதெல்லாம் சகஜம் தானே எனலாம்.

இந்நிலையில், கரீனா கபூர் மட்டுமின்றி, இந்த லாக்டவுனில் கர்ப்பமான பல பிரபலங்கள் குறித்து இங்கே காண்போம்..

2வது முறையாக

2வது முறையாக

40 வயதிலும் லீடு ரோலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை கரீனா கபூர், 2வது முறையாக கர்ப்பமாகி உள்ளார். அமீர் கானுடன் லால் சிங் சத்தா படத்தில் நடித்து வரும் இவர், இந்த லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் ஏதும் இல்லாத நிலையில், கணவர் சைஃப் அலி கானுடன் இணைந்து அடுத்த குழந்தையை ரெடி பண்ணி உள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த நட்சத்திர தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ராப் இசை பாடகியும் கர்ப்பம்

ராப் இசை பாடகியும் கர்ப்பம்

பிரபல ராப் இசை பாடகியான நிக்கி மினாஜ் மற்றும் கென்னத் பெர்ரி தங்களின் முதல் குழந்தைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நிக்கி மினாஜ், தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷ செய்தியை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.

ஹர்திக் பாண்டியாவின் மனைவியும்

ஹர்திக் பாண்டியாவின் மனைவியும்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவியும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இருவரும் வெளியிடவே இல்லை. கடந்த மே மாதம் வெளியான அந்த சந்தோஷ செய்தியை தொடர்ந்து ஜூலை 30ம் தேதி அழகான ஆண் குழந்தைக்கும் தந்தையானார் ஹர்திக் பாண்டியா. நடிகை நடாஷா அம்மாவானதற்கு பல பாலிவுட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலில் கர்ப்பம் அப்புறம் திருமணம்

முதலில் கர்ப்பம் அப்புறம் திருமணம்

பிரபல அமெரிக்க பாடகியான கேட்டி பெர்ரி, இந்த லாக்டவுன் சமயத்தில் கர்ப்பமாக இருப்பதை ரிவீல் செய்யும் விதமாக பிரெக்னன்ஸி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். ஆர்லாண்டோ ப்ளூமுடன் இன்னும் திருமணம் ஆகாத நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை உலகிற்கு சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

சூப்பர் மாடல்

சூப்பர் மாடல்

சூப்பர் மாடல் என்றதும் டக்குன்னு அவருன்னு நினைச்சுடாதீங்க.. இவங்க ரியல் சூப்பர் மாடல் கிகி ஹாதித். வெளிநாட்டில் எல்லாம் கர்ப்பம் தரித்த உடனே குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷ செய்தியை கிகி ஹாதித் மற்றும் சையின் மாலிக் இருவரும் இந்த லாக்டவுனில் வெளிப்படுத்தி இருந்தனர்.

Recommended Video

Actor Nakkul wife Shruthi Pregnant with her First child
ஜோக்கரும் சும்மா இல்ல

ஜோக்கரும் சும்மா இல்ல

ஜோக்கர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற ஜோக்வின் பீனிக்ஸும் இந்த லாக்டவுனில் சும்மா இல்லை போல.. தனது காதலியான ரூனி மாறாவை அம்மாவாக்கி உள்ளார். இருவரும் விரைவில் குட்டி ஜோக்கரின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், புதிதாக திருமணம் ஆன பல நடிகர்கள் நடிகைகளும் இந்த லாக்டவுனில் கரன்ட் பில்லை மிச்சம் படுத்துகிறேன் என்ற பேர்வழியில் மருத்துவ பில்லை அதிகரித்து வருகின்றனர் சந்தோஷமாக!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X