IPL 2023: நயன்தாரா மட்டுமில்லை.. இந்த கவர்ச்சி நடிகைகளும் CSK vs MI போட்டியை நேரில் பார்த்தாங்களா!

சென்னை: சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டி நடந்தாலே பிரபலங்கள் அணிவகுத்து எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வருகை தந்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் ஒரு போட்டியையும் விடாமல் தொடர்ந்து வந்து பார்த்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பிரியங்கா மோகனை தொடர்ந்து நேற்றைய போட்டியை நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் உடன் பார்த்து ரசித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், மேலும், பல நடிகைகள் நேற்றைய போட்டியை கண்டு ரசித்துள்ள போட்டோக்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Not Only Nayantha these glamorous actress also watched CSK vs MI match at Chepauk

தங்கமே நயன்தாரா: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் நயன்தாரா நேரில் கண்டுகளித்தார்.

விக்னேஷ் சிவன், அனிருத் விசிலடிக்க நடுவே நயன்தாரா நின்றபடி கொடுத்த போஸ் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகார ட்விட்டர் பக்கத்திலேயே பதிவிட்டது.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது தங்கத்துடன் தோனியின் விளையாட்டை பார்த்து ரசித்த சந்தோஷத்தை போட்டோக்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கமே என நயன்தாராவை கொஞ்சி வருகின்றனர்.

Not Only Nayantha these glamorous actress also watched CSK vs MI match at Chepauk

யெல்லோ டிசர்ட்டில் யாஷிகா ஆனந்த்: நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், தனுஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் மட்டுமின்றி பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த்தும் நேற்றைய போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு ரசித்துள்ளார்.

மஞ்சள் நிற டிசர்ட் அணிந்து கொண்டு ரசிகர்களுடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த யாஷிகா ஆனந்த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியையும் தல தோனியின் கேப்டன்ஸியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

மஞ்சள் ஜெர்ஸியில் மிருணாளினி: எனிமி, கோப்ரா என வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டு நடித்து வரும் நடிகை மிருணாளினி ரவியும் நேற்றைய போட்டியை நேரில் கண்டு ரசித்துள்ளார்.

மஞ்சள் நிறத்திலான தோனியின் 7ஆம் நம்பர் ஜெர்ஸியை அணிந்துக் கொண்டு வந்திருந்த மிருணாளினி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி மற்றும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இருந்து கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி மேலும், பல பிரபலங்களும் நேற்றைய போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X