People kuvikinu tirutanu terticcunna Escape ayitanuma venava he?: இது கமல் ட்வீட்டு தாங்க
சென்னை: கமல் ஹாஸன் போடும் ட்வீட்டுகளுக்கு கூகுளாலேயே அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழக அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் துணிந்து ட்வீட்டினாலும் சேஃபாக ட்வீட்டுகிறார். புரிந்தும், புரியாமலும் இருக்கும்படி ட்வீட்டி வருகிறார்.
அவர் கடந்த சில நாட்களாக யாரை மரண கலாய் கலாய்க்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

கமல்
கமல் போடும் அரசியல் தொடர்பான ட்வீட்டுகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ட்வீட்டை பார்த்தவுடன் நெட்டிசன்கள் கூகுள் டிரான்ஸ்லேட் அல்லது அகராதியை தேடி ஓடுகிறார்கள்.

சென்னை தமிழ்
தன்னை சென்னை தமிழில் ட்வீட்டுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து கமல் நேற்று சென்னை தமிழில் ட்வீட்டினார். திருடனு கூவிகினு ஜனம்
தெர்திச்சுன்னா
அவன் எஸ்கேப் ஆயிடனுமா வேனாவா? நின்னு நிதானமா
ங்கொம்மால கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா நாயகமா?
இதுவே அவரது ட்வீட்.

கூகுள்
கமலின் ங்கொ... ட்வீட்டின் அர்த்தம் புரியாத ஒருவர் அதை ஆங்கிலத்தில் படிக்க கூகுள் டிரான்லேட்டில் போட அது இப்படி வந்துள்ளது, People kuvikinu tirutanu terticcunna Escape ayitanuma venava he?
Kuptamarrincu nkommala standing calm? Annannu vacciko nayakama janama?

கொடுமைடா
சென்னை தமிழ் புரியவில்லை என்று கூகுளில் போட்டால் அதுவும் சதி செய்யவே என்ன கொடுமை சார் என்று நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
திருமணம்
கமலின் ட்வீட்டுகளுக்கு அர்த்தம் புரியாமல் பலரும் தலையை பிச்சுக்கொள்ளும் நிலையில் ஒருவர் ட்வீட்டியிருப்பதாவது, @ikamalhaasan கமல் ஹாஸனின் ட்வீட்டை புரிந்து கொள்ளும் பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











