ராஷ்மிகாவும் இல்ல, தமன்னாவும் இல்ல... தளபதி 66 ல் விஜய்யுடன் டூயட் பாடப் போறவர் இவர் தான்
சென்னை : விஜய்யின் பீஸ்ட் பட ரிலீசை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் தளபதி 66 படம் பற்றி அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. ஆக்ஷன் த்ரில்லர், அதே சமயம் பிளாக் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பீஸ்ட் அடுத்த அப்டேட் வரும் என சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள்.

தளபதி 66 ஷுட்டிங் எப்போ
இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். ஏப்ரல் 2ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை அன்று தளபதி 66 படத்திற்கான பூஜை போடப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 6 ம் தேதி முதல் சென்னை ஈசிஆரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் படத்தின் ஷுட்டிங் நடைபெற உள்ளதாம்.

பெரிதாகும் ஹீரோயின் லீஸ்ட்
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகிறவர் என வாரம் ஒரு நடிகையின் பெயர் கூறப்பட்டு வருகிறது. ஹீரோயின் யார், யார் என கேட்டுக் கொண்டிருக்கையில் முதலில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க போவதாக கூறினார்கள். பிறகு தமன்னாவின் பெயர் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து மெஹ்ரின் பிர்சாவா பெயர் கூறப்பட்டது. எல்லாவற்றையும் விட முதலில் தளபதி 66 ஹீரோயின் என கீர்த்தி சுரேஷ் பெயரும் கூறப்பட்டது.

இவர் தான் ஹீரோயினாக
ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி இவர்கள் யாருமே விஜய்க்கு ஜோடி இல்லையாம். பாலிவுட் ப்யூட்டி க்யூன் கிருத்தி சனோன் தான் தளபதி 66 படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க போகிறாராம். இது பற்றிய அகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாம். மற்றொரு தகவலாக தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். அதனால் இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு ஹீரோயின்களாம்.

தமிழில் அறிமுகமாகும் நடிகை
ஒருவேளை தளபதி 66 படத்தின் கிருத்தி சனோன் நடிப்பது உறுதியானால் இது தான் தமிழில் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். இவர் ஏற்கனவே பிரபாசின் ஆதிபுருஷ், டைகர் ஷெராஃபின் கணபதி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அறிமுகமாக அடுத்த பாலிவுட் ஹீரோயின் தயாராகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











