நானும், ரித்திக் ரோஷனும் பிரிய அர்ஜுன் ராம்பல் காரணமா?: சூசன் விளக்கம்
மும்பை: தான் தனது கணவர் ரித்திக் ரோஷனை பிரிய நடிகர் அர்ஜுன் ராம்பல் தான் என்று காரணம் சொல்வது சரியில்லை என சூசன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் மனைவி அவரை விட்டு பிரிந்துவிட்டார். 4 ஆண்டுகள் காதலித்து அதன் பிறகு 2000ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி சூசன் ரித்திக் ரோஷனை திருமணம் செய்து கொண்டார்.
13 ஆண்டுகள் ரித்திகுடன் வாழ்ந்து ரிஹான், ரிதான் என்ற 2 ஆண் குழந்தைகளுக்கு தாயான பிறகு சூசன் தனது கணவரை பிரிய முடிவு செய்தார்.

அர்ஜுன் ராம்பல்
சூசனுக்கும் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கு இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதால் தான் அவர் தனது கணவர் ரித்திக்கை பிரிந்துவிட்டார் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.

கேஆர்கே
இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான கே.ஆர்.கே. ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சூசனுடன் இருப்பதற்காக விரைவில் ஒரு நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்யவிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சூசன்
சூசன் ரித்திக்கை பிரிய தான் காரணம் இல்லை என்று நடிகர் அர்ஜுன் ராம்பல் தெரிவித்தார். தான் ரித்திக்கை பிரிந்ததற்கு அர்ஜுன் ராம்பல் மீது குற்றம் சுமத்துவது சரியில்லை. நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள் என்று சூசன் தெரிவித்துள்ளார்.

காரணம் இல்லை
ரித்திக்கை பிரிய காரணம் எதுவும் இல்லை. சில நேரம் சூழ்நிலைகளால் இவ்வாறு செய்ய வேண்டி உள்ளது என்று தெரிவித்தார் சூசன்.


Click it and Unblock the Notifications











