என்னை அவருக்கு நன்றாகத் தெரியும்: ஸ்ருதியை தாக்கியவர் வாக்குமூலம்
மும்பை: நடிகை ஸ்ருதியை வீடு புகுந்து தாக்கியவர் அக்ஷரா ஹாஸனை சந்திக்க விரும்பியுள்ளார்.
கடந்த 19ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் தங்கியிருக்கும் நடிகை ஸ்ருதி ஹாஸனின் வீட்டுக்கு ஒருவர் சென்று கதவை தட்டினார். கதவை திறந்த ஸ்ருதியை அவர் கழுத்தை நெறித்து தாக்கினார். இது குறித்து ஸ்ருதி மும்பை போலீசில் புகார் கொடுத்தார்.
அவர் புகார் கொடுத்த 48 மணி நேரத்திற்குள் அசோக் த்ரிமுகே என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ருதிக்கு தெரியும்
ஸ்ருதி ஹாஸனுக்கு தன்னை தெரியும் என்றும், தான் அவரை ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து பேசியதாகவும் அசோக் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ருதியின் அம்மா சரிகா 1970களில் நடித்த படங்களில் தான் ஸ்பாட்பாயாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 நாளுக்கு முன்னால் கூட
தான் ஸ்ருதியின் வீட்டுக்கு சென்றதற்கு 2 நாட்களுக்கு முன்பு கூட தான் ஸ்ருதியிடம் பேசியதாக அசோக் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்ருதி அசோக்கை தனது வீட்டுக்கு வெளியே சந்தித்து பேசியுள்ளாராம்.

அக்ஷரா
அசோக் ஸ்ருதியை அணுகி துணை இயக்குனராக இருக்கும் அவரது தங்கை அக்ஷராவிடம் தனது சகோதரருக்கு ஸ்பாட் பாய் வேலை வாங்கித் தருமாறு முன்பே கேட்டுள்ளாராம்.

கதவை தட்டினேன்
ஸ்ருதியின் வீட்டு கேட்டில் உள்ள பதிவேட்டில் எனது பெயரை எழுதிவிட்டு தான் அவரது வீட்டுக்கு சென்றேன். அவரது கதவை தட்டி அதை ஸ்ருதி திறந்தபோது என்னை நினைவிருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். அதற்குள் அவர் பயந்துபோய் கதவை சாத்திவிட்டார் என்றார் அசோக்.

ஸ்ருதி
அசோக் தன்னிடம் தனது சகோதரருக்கு வேலை கேட்டு ஒன்றும் வரவில்லை என்று ஸ்ருதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் அசோக் இவ்வாறு கூறியிருப்பது இந்த வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











