சிம்புவின் புதிய வீடியோ.. அட இதுதான் விஷயமா?.. கிரீன் மேட் கலக்கல்!

சென்னை: சிம்பு நடிப்பில் எஸ்டிஆர் 48 படம் உருவாகி வருகிறது. நேற்று திடீரென நடிகர் சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டதும் என்னடா இது கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரேஞ்சுக்கு இருக்கே என்றும் நெட்பிளிக்ஸில் ஏதாவது வெப்சிரீஸில் நடிக்கப் போறாரா சிம்பு என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் பறந்தன.

ரசிகர்கள் பலரும் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் எஸ்டிஆர் 48 படத்தின் கிளிம்ப்ஸ் என்றும் இந்தளவுக்கு படம் வந்தால் சிம்பு படமே 1000 கோடி வசூல் அடிக்கும் என்றெல்லாம் ஃபயர் விட்டனர்.

Not STR 48 update its just an advertisement shoot done by Simbu

இந்நிலையில், அதெல்லாம் பாழாய் போகும் அளவுக்கு ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

கமல்ஹாசன் தயாரிப்பில்: மாநாடு படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் பெரிதாக ஓடவில்லை. கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படமும் சொதப்பி விட்டது. இந்நிலையில், எஸ்டிஆர் 48 படத்தின் மீது ரொம்பவே நம்பிக்கையுடன் இருக்கிறார் சிம்பு. முதல் முறையாக 100 கோடி பட்ஜெட்டில் சிம்புவை நம்பி அந்த படத்தை கமல்ஹாசன் உருவாக்கி வருகிறார்.

Not STR 48 update its just an advertisement shoot done by Simbu

எஸ்டிஆர் 48 படத்தின் காட்சியா?: கேம் ஆஃப் த்ரோன்ஸ் கிளைமேக்ஸ் காட்சி போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை நேற்று இரவு சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கம்மிங் சூன் என போட்டிருந்தார். அப்போதே ராஜ்கமல் சார்பில் கமல்ஹாசன் வீடியோ வெளியிடாத நிலையில், இது எஸ்டிஆர் 48 படத்தின் காட்சி இல்லை என புரிந்து விட்டது. எஸ்டிஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதே போல இருந்த நிலையில், படமும் தரமாக வரும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

வெறும் விளம்பரம்: நடிகர் சிம்பு பல்வேறு விளம்பரங்களில் தொடர்ந்து இது ராங் டான்னு நடித்து வருகிறார். திடீரென இப்படியொரு வீடியோவை எந்தவொரு அறிவிப்பும் குறிப்பும் இல்லாமல் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்புகளை எகிற விட்ட நிலையில், தற்போது அது ஒரு விளம்பரத்துக்கான சூட் என்பது தெரியவந்துள்ளது.

க்ரீன் மேட்டில் போட்டோஷுட்: ஹாலிவுட் தரத்துக்கு உருவாக்கப்பட்ட வீடியோ காட்சியை க்ரீன் மேட் உதவியுடன் விளம்பர இயக்குநர் ஒருவர் இயக்கியிருக்கிறார். அவருடன் எடுத்துக் கொண்ட பிஹைண்ட் தி சீன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன. இது விளம்பரமாக இருக்கட்டும். ஆனால், எஸ்டிஆர் 48 படத்தின் அவுட் புட் இதை போலவே தாறுமாறாக ஹாலிவுட் தரத்தில் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X