Vidamuyarchi: மனசே விட்டுப்போச்சு போங்க.. புத்தாண்டு அதுவுமா இப்படி குண்டை தூக்கிப்போட்டா எப்படி?
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படமாவது பொங்கலுக்கு வந்திருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் உள்ளே புகுந்து குட்டையை குழப்பிய லைகா நிறுவனம் தானும் வராமல் அடுத்தவனையும் வரவிடாமல் இப்படி தடுக்கலாமா என அஜித் ரசிகர்கள் கோபத்தின் உச்சியில் உள்ளனர்.
இந்த ஆண்டு எப்படியும் தல பொங்கல் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடைசியில் அல்வா கொடுத்துவிட்டார் அஜித் குமார். மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் ஆரம்பித்து அதை ரெஃபரன்ஸ் ஆக வைத்து மார்க் ஆண்டனி படத்தை முடித்து குட் பேட் அக்லி படத்தையும் எடுத்து முடித்துவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு விடாமுயற்சி டிரெய்லர் வெறித்தனமாக வெளியாகப் போகிறது என காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா போட்ட குண்டு ஜீரணிக்கவே முடியாத ஒன்று என அஜித் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கெட்ட வார்த்தைகளால் தயாரிப்பு நிறுவனத்தை திட்டி தீர்த்து வருகின்றனர்.
தள்ளிப்போன விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும் கேம் சேஞ்சர் படத்துடன் விடாமுயற்சி போட்டி போடாது என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புத்தாண்டு பரிசாக அஜித் ரசிகர்களுக்கு ஒரு போஸ்டர் கூட விடாமல் விடாமுயற்சி தள்ளிப்போன அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குட் பேட் அக்லி தான் வேண்டும்: இனிமேலும் விடாமுயற்சி படத்துக்காக காத்திருப்பது முட்டாள்த்தனம் என்றும் குட் பேட் அக்லி படத்தை முதலில் ரிலீஸ் பண்ணுங்க ஏகே என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் நள்ளிரவு முதல் அலப்பறையை ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்களை இப்படி கடுப்பில் ஆழ்த்திவிட்டு தாமதமாக படம் வெளியானால் நிச்சயம் எந்தவொரு ஹைப்பும் இருக்காது என்றும் படம் சுமாராக இருந்துவிட்டால் வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











