Vijay VS Sanam Shetty: அவ்வளவு வொர்த் இல்லை.. அது வேற வாய்.. விஜய் ரசிகர்களை போட்டு பொளக்கும் சனம் ஷெட்டி!
சென்னை: நடிகர் விஜய் தனது கட்சியின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் பேசும்போது தனது விவாகரத்து வழக்கு குறித்து பேசினார். அப்போது, நீங்கள் போராட வேண்டாம், நீங்கள் வருந்தாதீர்கள், நீங்கள் வருந்துவதைப் பார்த்தால், எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவு வொர்த் இல்லை என்று பேசினார். விஜயின் இந்த பேச்சு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இது குறித்து நடிகை சனம் ஷெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆதங்கமாக பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் மிகவும் மோசமாக பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாகவும் ஷனம் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.
விஜய் தனது மனைவி சங்கீதாவை வொர்த் இல்லை என்று குறிப்பிட்டதற்கு, " என்னது வொர்த் இல்லையா? இதுக்கா இந்த பெண்கள் ஆரவாரம் செய்கிறார்கள்? நோ கமெண்ட்ஸ், நம்பிக்கையே போச்சு" என்று பதிவிட்டார். இவரது இந்த பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர், "உங்களைப் போன்ற துரோகிகள் எங்களுக்குத் தேவையில்லை மேடம். தளபதிக்கு விசுவாசமான ஆதரவாளர்கள் உள்ளனர்" என்று பதிவிட்டார்.

அதற்கு சனம் ஷெட்டி தரப்பிலோ, " முதலில் உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள், உங்கள் தலைவர் தவறாக இருக்கும் போது தைரியமாகக் கேள்வி கேளுங்கள்! ஒரு உண்மையுள்ள தொண்டன் செய்ய வேண்டியது இதுதான்! அது துரோகம் அல்ல.. இதுதான் உண்மையான ஆதரவு! வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று பதில் அளித்துள்ளார்.
அதே வாய் தான்: மற்றொரு இணையவாசி, விஜய்யை எதிர்த்து கமெண்ட் செய்து வருகிறீர்கள், உங்களைப் போட்டு பொளப்பாங்களே என்று பதிவிட, அதற்கும் சனம் ஷெட்டி மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார். அதாவது, " ஆமாம், அதெல்லாம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள்! முன்பு உண்மையைப் பேசியதற்காக என்னைப் பாராட்டிய அதே நபர்களால் தான் இப்போது என் உண்மையான கேள்விகளை ஜீரணிக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் செய்யும் தப்பு: மேலும் ஒருவர் விஜய் சங்கீதா பெயரைக் குறிப்பிட்டு வொர்த் இல்லை என்று கூறவில்லையே என்று குறிப்பிட, " எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. வீடியோ ரொம்பவே தெளிவாக இருக்கு. அவர் சொன்னது இந்த பிரச்சனைக்கு வொர்த் இல்லைன்னு தானே? அப்போ அது என்ன பிரச்னை? அது யாரைப் பத்தி? நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் சொன்ன சரியான விஷயங்களை முதல் நாளில் இருந்தே சரியான காரணத்துக்காக நான் வலுவாக ஆதரவு தெரிவித்து வந்துள்ளேன். இன்னைக்கு அவர் தப்பு பண்ணப்போறத நான் கேள்வி கேக்குறேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











