ரஜினி, கமலை ஒன்றாக நடிக்க வைத்த பிரபல இயக்குனர் மரணம்
சென்னை: பிரபல இயக்குனர் ஐவி சசி இன்று சென்னையில் காலமானார்.
பிரபல மலையாள இயக்குனர் ஐவி சசி. மலையாளத்தில் பல படங்களை இயக்கியுள்ள சசி தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், காளி, ஒரே வானம் ஒரே பூமி, குரு, எல்லாம் உன் கைராசி உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகை சீமாவை திருமணம் செய்த சசி குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார்.
வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 69. அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சசியின் மறைவு செய்தி அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications