twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. 375 படங்களுக்குப் பணியாற்றியவர்.. திரையுலகம் இரங்கல்!

    By
    |

    சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக பிரபல இசை அமைப்பாளர் மறைந்ததை அடுத்து ஏராளமான திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கடினமான கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் ஏராளமானவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக, இந்த இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது சினிமா துறையினரை கவலையடைய செய்துள்ளது.

    ரவுடிகள் தாக்குதல்.. மருத்துவமனையில் நாஞ்சில் விஜயன் அட்மிட்.. சூரியாதேவியை கைது செய்ய கோரிக்கை!ரவுடிகள் தாக்குதல்.. மருத்துவமனையில் நாஞ்சில் விஜயன் அட்மிட்.. சூரியாதேவியை கைது செய்ய கோரிக்கை!

    இசை அமைப்பாளர்

    இசை அமைப்பாளர்

    கடந்த சில நாட்களுக்கு முன், கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி சென்னையில் மரணமடைந்தார். இந்நிலையில் மூத்த இசை அமைப்பாளர் ராஜன், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 85. இவரும் இவர் சகோதரர் நாகேந்திராவும் இணைந்து 375 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

    வீட்டுக்கு வீடு வாசப்படி

    வீட்டுக்கு வீடு வாசப்படி

    கன்னட சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர்கள், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர். கன்னடத்தைப் போலவே தெலுங்கிலும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர்கள், தமிழில், கே.பாலாஜி, மாலினி நடித்த எல்லோரும் வாழவேண்டும், வீட்டுக்கு வீடு வாசப்படி உள்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

    கல்யாண்ஜி, ஆனந்த்ஜி

    கல்யாண்ஜி, ஆனந்த்ஜி

    70 களில் கன்னட சினிமாவில் கொடி கட்டிப் பறந்த இவர்கள் பல முக்கியமான படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர். கன்னட சினிமாவின் கல்யாண்ஜி, ஆனந்த்ஜி என்று இவர்கள் அழைக்கப்பட்டு வந்தனர். நாகேந்திரா கடந்த 2000 ஆம் ஆண்டு தனது 65 வது வயதில் உயிரிழந்தார்.

    உடல் நிலை மோசம்

    உடல் நிலை மோசம்

    இதையடுத்து தனது மகனுடன் இணைந்து படங்களுக்கு இசை அமைத்து வந்தார், ராஜன். முதுமை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன், அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் உடல் நிலை மிகவும் மோசமானது.

    கன்னட சினிமா

    கன்னட சினிமா

    மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர், பெங்களூரில் உள்ள வீட்டில் நேற்று இரவு மரணமடைந்தார். அவர் மறைவு, கன்னட சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளனது. திரையுலகினர் நேரிலும் சமூக வலைதளங்களிலும் அவர் இசை அமைத்த பாடல்களை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Music composer Rajan has passed away at 85 in Bengaluru. Rajan-Nagendra duo needs no introduction who have ruled together Kannada cinema in the ‘70s with their evergreen songs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X