மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் திடீர் பலி.. அதிர்ச்சி அடைந்த திரையுலகம்!
பிரபல மலையாள நடிகர் கலாபவன் ஜயேஷ். மிமிக்ரி மூலம் சினிமாவுக்கு வந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.
பிரபல மலையாளர் நடிகர் கலாபவன் ஜயேஷ். மிமிக்ரி மூலம் சினிமாவுக்கு வந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.
லால் ஜோஷ் இயக்கிய முல்லா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். இந்தப் படத்தில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது.

காமெடி நடிப்பு
பிறகு சால்ட் அண்ட் பெப்பர், பிரேதம் 2, பாசஞ்சர், கிரேஸி கோபாலன் உட்பட பல படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் இவரது காமெடி மற்றும் குணசித்திர நடிப்பு பேசப்பட்டது. டிவி சேனல்களிலும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள கலாபவன் ஜயேஷ், கடந்த 20 வருடமாக மிமிக்ரியும் செய்துவந்தார். இவரது நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

சிகிச்சை பலனின்றி
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதற்காக கடந்த ஒரு வருடமாகச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திருச்சூரில் உள்ள கொண்டகரா சாந்தி மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 44. அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்க இருக்கிறது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திரையுலகினர் இரங்கல்
மறைந்த கலாபவன் ஜயேஷூக்கு சுனஜா என்ற மனைவியும் சிவானி என்ற மகளும் உள்ளனர். அவர் மகன், சித்தார்த் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஜயேஷ் மறைவை அடுத்து மலையாளத் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமுக வலைத்தளங்களில் அவருக்கு ரசிர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிப்பு ஆற்றல்
இயக்குனர் லால் ஜோஷ் கூறும்போது, சின்ன வேடத்தில் நடித்தாலும் அந்த வேடத்தை முக்கியமானதாக மாற்றிவிடும் நடிப்பு ஆற்றல் கொண்டவர் அவர் என்று புகழந்துள்ளார். கடந்த சில நாட்களாக, மலையாள சினிமா துறையினர் தொடர்ந்து உயிரிழந்து வருவது, அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











