சினிமா தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி.. தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை.. திரையுலகம் அதிர்ச்சி!

By

ஐதராபாத்: பிரபல சினிமா தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இந்த

வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. இருந்தும் இந்த வைரஸால் பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 ஆக அதிகரித்துள்ளது. இதன் பாதிப்பிலிருந்து 3,94,227 பேர் குணமடைந்துள்ளனர். 2,35,433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

இந்நிலையில் இந்த வைரஸுக்கு பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் மனைவி எம்.என்.ராஜமும் இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். சீரியல் நடிகை நவ்யா சுவாமி, சில தெலுங்கு சின்னத்திரை நடிகர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர்.

போக்குரு ராமா ராவ்

போக்குரு ராமா ராவ்

ஒருசில தெலுங்கு தயாரிப்பாளர்களும் உயிரிழந்தனர். இந்நிலையில் மற்றொரு பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். போக்கூரி ராமாராவ் என்ற அவர் தனது சகோதரர் ரமேஷ் ராவுடன் இணைந்து ஈத்தரம் பிலிம்ஸ் சார்பில் பல படங்களைத் தயாரித்துள்ளனர். கோபிசந்த் நடித்த ரணம், நேட்டி பாரதம், இன்ஸ்பெக்டர் பிரதாப், அம்மாயிகோசம் உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை மோசமானது. மூச்சுத்திணறலும் ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சிலர் கூறுகின்றனர். இவரது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X