காதலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை... இது படத்தோட தலைப்புதான்!

By Mayura Akilan

இப்போதெல்லாம் பிரபல நடிகர்களின் படங்களுக்கு தலைப்பு வைக்க தலையை பிய்த்துக் கொள்கின்றனர். ஆனால் புதிய இயக்குநர்களோ, அறிமுக நாயகர்களோ தலைப்புக்கு மெனக்கெடுவதில்லை.

பீட்ஸா, அட்ட கத்தி, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என ஜஸ்ட் லைக் தட் படத்திற்கு தலைப்பு வைத்து அதை வெற்றி பெறவும் வைத்துவிடுவார்.

சினிமாவின் மூலதனம் காதல்தான் காதல் இன்றி கதையோ, காவியமோ தமிழ் சினிமாவே இல்லை. அதையே தலைப்பாக வைத்திருக்கிறார் ஒரு இயக்குநர் படத்திற்குப் பெயர் 'காதலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை' என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

யார் நடிக்கிறாங்க?

யார் நடிக்கிறாங்க?

இந்த திரைப்படத்தில் யுவன், சரண்யா மோகன் ஆகியோர் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். பள்ளி மாணவியாகவும், நர்சரி பள்ளி ஆசிரியையாகவும் இரண்டு தோற்றத்தில் நடித்திருக்கிறார் சரண்யா மோகன்.

அப்படி என்ன விசேசம்?

அப்படி என்ன விசேசம்?

காதல் மனித வாழ்க்கையின் முக்கிய அங்கம். இந்த படத்திலும் காதலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை தலைப்பிலேயே சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் செல்வபாரதி.

காதல் திரைப்படங்களுக்கு வெற்றி

காதல் திரைப்படங்களுக்கு வெற்றி

வித்தியாசமான தலைப்புகள், காதலை சொல்லும் திரைப்படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த காதலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை திரைப்படமும் வெற்றி பெரும் என்கிறார் இயக்குநர்.

சரண்யா மோகன் சென்டிமென்ட்

சரண்யா மோகன் சென்டிமென்ட்

சரண்யா மோகன் கதாநாயகியாக நடித்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்ற படங்கள்தான். வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்கள் ஹிட் ஆகியுள்ளன. அந்த வரிசையில் இந்த படமும் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

பிரியமானவளே... வசீகரா....

பிரியமானவளே... வசீகரா....

சென் மூவீஸ் சார்பில் செல்வபாரதி தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா போன்ற படங்களை டைரக்டு செய்தவர்.

இமான் அண்ணாச்சி காமெடி

இமான் அண்ணாச்சி காமெடி

இந்த படத்தில் நகைச்சுவைக்காக சொல்லுங்கண்ணே புகழ் இமான் அண்ணாச்சி நடிக்கிறார், அவருடன் தீப்பெட்டி, கணேசன் நடிக்கின்றனர்.

மகன்கள் நடிக்கின்றனர்.

மகன்கள் நடிக்கின்றனர்.

இந்த படம் பள்ளி மாணவர்கள் பயிலும் டியூசன் சென்டரை கதைக் களமாக கொண்ட காதல் கதை. காதல் வலியை மட்டும் தருவது அல்ல வழியையும் காட்டும் என்ற கருவும் இருக்கும் என்கிறார் இயக்குநர். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில் இயக்குநரின் மகன்கள் ராகுல், ரோகித் நடித்துள்ளனராம்.

புதிய முகமே பெட்டர்

புதிய முகமே பெட்டர்

சிறு பட்ஜெட் படங்கள் நன்றாக ஓடுகின்றன. கதையை கொண்டு பெரிய ஹீரோக்கள் பின்னால் அலைந்து காலத்தை வீணடிப்பதை விட்டு புதுமுகங்களை வைத்து படம் எடுப்பதே உகந்தது என்று உணர்ந்து இப்படத்தை எடுக்கிறேன் என்கிறார் செல்வபாரதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X