அப்பளம் போல நொறுங்கிய கார்.. ஆனாலும் அஜித் கார் பந்தயத்தில் 100% பங்கேற்பார்.. எப்படி தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெறும் Michelin 24h series எனும் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். அதற்கான பிரத்யேக கார் பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவரது கார் விபத்துக்குள்ளாகி பல ட்ரிஃப்ட்கள் அடித்து நிற்க அங்கிருந்த நபர்கள் ஓடோடி வந்து காரில் இருந்த அஜித் குமாரை பத்திரமாக வெளியேற்றினர்.

நடிகர் அஜித் குமார் இதெல்லாம் ஒரு விபத்தே இல்லை என்பது போல அசால்ட்டாக காரில் இருந்து இறங்கி வெளியே வந்து நடந்து செல்லும் காட்சிகள் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளது. மேலும், அஜித் குமாருக்கு எந்தவொரு அடியோ, பாதிப்போ ஏற்படாத நிலையில், கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ajith kumar ajith kumar car race ajith kumar car accident

அப்பளம் போல கார் நொறுங்கிய நிலையில், அஜித் குமார் கார் பந்தயத்தில் பங்கேற்பாரா? என விசாரித்த நிலையில், அவர் அந்த போட்டியில் பங்கேற்பது 100 சதவீதம் உறுதி என்றும் இதுவும் ஒரு வகையான கார் பந்தய பயிற்சி தான் என்றும் இதில் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அஜித் நலமுடன் உள்ளார்: எத்தனை முறை வீழ்ந்தாலும் பீனிக்ஸ் பறவையை போல மீண்டும் மீண்டும் எழுந்து வரும் நபர் தான் அஜித் குமார் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான். வலிமை பட சமயத்தில் பைக்கில் இருந்து அவர் விழுந்து விபத்து ஏற்பட்ட போது கெட் வெல் சூன் அஜித் என ரசிகர்கள் ஹாஷ்டேக் போட்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது கூட அந்த காட்சியை முடித்துக் கொடுத்துவிட்டுத் தான் ஓய்வெடுக்க அஜித் சென்றார் என எச். வினோத் கூறினார். சமீபத்தில், விடாமுயற்சி படத்துக்காக நடந்த படப்பிடிப்பின் போது ஆரவ் மற்றும் அஜித் காரில் செல்லும் போது கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான போதும் அஜித் குமார் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கையாண்ட நிலையில், எந்தவொரு காயமும் இன்றி உயிர் தப்பினார். தற்போது நடைபெற்ற விபத்திலும் அவர் நலமுடன் உள்ளார் என்கின்றனர்.

ajith kumar ajith kumar car race ajith kumar car accident

எக்ஸ்ட்ரா கார்கள் எப்பவுமே ரெடியா இருக்கும்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஸ் கார் இப்படி அப்பளம் போல கார் பந்தயத்துக்கு முன்பாகவே விபத்துக்குள்ளான நிலையில், இதே காரில் மீண்டும் அஜித் பயணிப்பாரா? அல்லது பந்தயத்தை கை விட்டு விடுவாரா? என்கிற கேள்விகள் கிளம்பியுள்ள நிலையில், கட்டாயம் அஜித் குமார் கார் பந்தயத்தில் பங்கேற்பார் என்றும் ஒவ்வொரு கார் பந்தய போட்டியாளர்களுக்கும் சில உயர் ரக கார்கள் ஸ்டாண்ட்பை மோடில் எப்போதுமே ரெடியாக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

அஜித் வெற்றி பெறுவார்: நடிகர் அஜித் குமாரின் டீம் இந்த கார் பந்தயத்தில் கட்டாயம் கலந்துக் கொண்டு வெற்றி வாகை சூடும். ரசிகர்களுக்கு விடாமுயற்சி படம் பொங்கல் ட்ரீட்டாக அமையவில்லை என்றாலும் அஜித்தின் கார் பந்தயம் கண்டிப்பாக மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்கின்றனர். நடிகர் அஜித்துக்கு எதுவும் ஆகக்கூடாது, அவர் நல்லா இருந்தா போதும் என ரசிகர்கள் கடவுளை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X