சன்னி லியோனுக்கு சம்பளம் ரூ.75 லட்சம்: கடுப்பான ஹீரோயின்!

By Mayura Akilan

தெலுங்கில் கரண்ட் தீகா என்ற படத்தில் சன்னி லியோன் போட்ட ஆட்டத்தால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. ஆனால் சன்னி லியோனை கவர்ச்சியாக காட்டவில்லை என்று கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.

ஹீரோயினை விட குத்தாட்டம் போடும் நாயகிக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தால் படத்தின் நாயகிக்கு கோபம் வரத்தானே செய்யும். தெலுங்கில் கரண்ட் தீகா என்ற படத்தில் நடிக்க 2 நாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த சன்னி லியோனுக்கு ரூ. 75 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளார்களாம். இதுதான் அந்தப் படத்தின் நாயகி ரகுலுக்கு காதில் புகை வர காரணமாகிவிட்டது.

தமிழில் சூப்பர் ஹிட் படமான சிவகார்த்திகேயனின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' தற்போது தெலுங்கில் 'கரண்ட் தீகா' என்ற பெயரில் தயாராகி வருகிறது.

மனோஜ் மஞ்சு

மனோஜ் மஞ்சு

கரண்ட் தீகா சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவிற்கு பதில் மனோஜ் மஞ்சு, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.

டீச்சர் சன்னி லியோன்

டீச்சர் சன்னி லியோன்

தமிழில் சத்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார். பிந்து மாதவி நடித்த டீச்சர் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். 'வடகறி' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சன்னிலியோன். தற்போது இவர் தெலுங்கில் அறிமுகமாகும் படம் இது.

குத்தாட்டமும் கூட

குத்தாட்டமும் கூட

கரண்ட் தீகாவில் கமர்ஷியல் நோக்கில் சன்னி லியோனின் சீன்களை அதிகப்படுத்தியதோடு ஒரு குத்து பாடலும் வைத்துள்ளனராம். இதில்தான் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் சன்னிலியோன்.

ஏ சர்டிபிகேட்

ஏ சர்டிபிகேட்

இந்த படத்தில் சன்னி லியோன் போட்ட ஐட்டம் டான்சை பார்த்து ஆடிப்போன சென்சார் அதிகாரிகள் ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சம்பளம் ரூ.75 லட்சம்

சம்பளம் ரூ.75 லட்சம்

இந்தப் படத்தில் நடிக்க நடிகை சன்னிலியோனுக்கு ரூ.75 லட்சம் சம்பளமாம். இந்த தகவலை ஹீரோ மஞ்சு மனோஜ் ஒரு பேட்டியின்போது தெரியாமல் உளறிவிட்டார்.

கடுப்பான ஹீரோயின்

கடுப்பான ஹீரோயின்

இதனால் இந்த படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ள ராகுல் ப்ரீத்திசிங் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது. மாதக்கணக்கில் கால்ஷீட் வாங்கிவிட்டு வெறும் நாற்பது லட்ச ரூபாய் தனக்கு சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர், இரண்டே இரண்டு நாள் நடித்த சன்னிலியோனுக்கு ரூ.75 லட்சமா? என்ற கடுப்பில் இருக்கின்றாராம்.

இப்பவே புகைய ஆரம்பிக்கிதே

இப்பவே புகைய ஆரம்பிக்கிதே

அப்படி என்ன நம்மகிட்ட இல்லாதது சன்னிலியோன் கிட்ட இருக்கு' என்று படக்குழுவினர்களின் காதுபட புலம்பி வருகிறாராம் கரண்ட் தீகா நாயகி. படம் வெளியான பின்னர் எங்கெங்கு ஷாக் அடிக்கப் போகிறதோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X