twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த வீடியோவில் என்ன தவறு, உண்மையை தான் சொல்லியிருக்கிறோம்: விஷால்

    By Siva
    |

    சென்னை: நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை விளாசி வெளியிடப்பட்ட பிரச்சார வீடியோ குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

    நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இருக்கும் பாண்டவர் அணி செய்த சாதனைகள் குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால். அந்த வீடியோவில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை ஊழல்வாதிகளாக காட்டியிருந்தார்கள்.

    அதை பார்த்த வரலட்சுமியும், ராதிகா சரத்குமாரும் விஷாலை விளாசினார்கள். இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஷால். இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியதாவது,

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    காவல்துறை அவ்வளவு சீக்கிரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாது. சரத்குமார் விஷயத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு நீதிமன்றமே போலீசாருக்கு உத்தரவிட்டது. நான் ஒன்றும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வைக்கவில்லை.

    வீடியோ

    வீடியோ

    சும்மா ஏவி விடுறதுக்கான ஏ.வி. இல்லை. நாங்கள் உண்மையை காட்டியிருக்கிறோம். ஒருவர் தவறு செய்திருந்தால் அது யாராக இருந்தாலும் நடிகர் சங்கம் அல்லது சட்டம் மூலம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறினோம். ஒரு அணியாக நாங்கள் செய்ததை தெரிவிக்கும் போது அவர்கள் செய்ததை குறிப்பிடுவதில் தவறு இல்லை.

    வரலட்சுமி

    வரலட்சுமி

    நடிகர் சங்கம் பிளவை நோக்கிச் சென்றால் 450 கலைஞர்களை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று நிதி திரட்ட முடியுமா?. தேர்தலால் எந்த பிளவும் ஏற்படும் என்று அர்த்தம் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் நடிகர் சங்க குடும்பத்திற்கு திரும்பிவிடுவோம். வரலட்சுமியின் ட்வீட்டை நான் பார்க்கவில்லை. வாக்களிக்கும்போது உறுப்பினர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை தெரிய வரும். வரலட்சுமி உள்பட அனைவருக்கும் கருத்து இருக்கலாம். ஏன், எனக்கு கூட என் நண்பர்கள் மற்றும் அவர்களின் செயல்கள் மீது அதிருப்தி இருக்கலாம். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என்று விஷால் தெரிவித்துள்ளார்.

    விளாசல்

    விளாசல்

    விஷால் வெளியிட்ட வீடியோவை பார்த்த வரலட்சுமி கோபத்தில் ட்வீட் போட்டார். உங்கள் மீது வைத்திருந்த கொஞ்ச மரியாதையும் போய்விட்டது. என் வாக்கை இழந்துவிட்டீர்கள். இந்த வீடியோ மூலம் உங்களின் வளர்ப்பு தெரிகிறது. நீங்கள் இரட்டை வேடம் போடுவது மற்றும் உங்களின் பொய்கள் அனைவருக்கும் தெரியும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vishal said that there is nothing wrong in the campaign video as they have shown the truth.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X