பிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு?: ஜனனி

By Siva

Recommended Video

தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு?: ஜனனி- வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்கள் ஜெயிக்க வேண்டும் என்று கூறியதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை ஜனனி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜனனி. அவரால் சர்ச்சைகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தார்.

பிக் பாஸ் 2 வீட்டின் முதல் கேப்டன், கோல்டன் டிக்கெட் வென்றவர் என்ற பெருமையை பெற்றார். பிக் பாஸ் பற்றி அவர் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ்

பிக் பாஸ்

எனக்கு பட வாய்ப்புகள் சரியாக இல்லை. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நல்லது என்று நினைத்தேன். நான் எப்படி பேசுவேன், நடந்து கொள்வேன் என்பதை மக்களால் தெரிந்து கொள்ள முடியும். முதல் சீசன் பார்த்தபோது அது மக்களிடம் எப்படி சென்றடைந்தது என்பதை தெரிந்து கொண்டேன்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

கோபம் வந்தால் ஜாக்கிரதையாக இருக்குமாறு காயத்ரி ரகுராம் எச்சரித்தார். நிகழ்ச்சியில் எதையும் மிகைப்படுத்தாமல் உண்மையை காட்டியுள்ளனர். எனக்கு எந்த யுக்தியும் இல்லை. நான் நானாக இருந்தேன். பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே மகத் மற்றும் ரம்யாவை எனக்கு தெரியும். வீட்டிற்கு சென்ற இடத்தில் பொன்னம்பலம் ஐயா மற்றும் பாலாஜி அண்ணா எனக்கு நன்கு பழக்கமானார்கள்.

ரித்விகா

ரித்விகா

முதலில் எனக்கும், மும்தாஜ் மேடத்திற்கும் ஒத்துப் போகவில்லை. பின்னர் அவரின் குணத்தை புரிந்து கொண்டு அவருடன் நன்றாக பழகினேன். நானும், ரித்விகாவும் தோழிகளாகிவிட்டோம். யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் வேண்டும் என்றே கேங் உருவாக்கவில்லை. நீங்கள் 90 நிமிடம் தான் பார்ப்பீர்கள். மற்ற நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடிப்போம். யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள்.

தமிழ் பெண்கள்

தமிழ் பெண்கள்

தமிழ் பெண்கள் ஜெயிக்க வேண்டும் என்று நானும், ரித்விகாவும் கூறியதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தமிழ் படங்களில் கூட தமிழ் பெண்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று தான் இப்படி கூறினோம். இது தமிழ் நிகழ்ச்சி. நாங்கள் இவ்வளவு தூரம் வந்ததால் நம்மில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றோம். இதில் என்ன தவறு உள்ளது? பார்வையாளர்களுக்கு எங்களை பிடிக்கவில்லை என்றால் ஃபைனல் வரை வந்திருக்க முடியுமா?

யாஷிகா

யாஷிகா

மகத்துக்கு காதலி இருப்பது எனக்கு தெரியும். முதலில் யாஷிகாவுடன் நட்பாக பழகிய மகத்துக்கு பின்னர் காதல் ஏற்பட்டது. யாஷிகாவுக்கும் தான். வெளி உலகே தொடர்பே இல்லாமல் இருந்தால் அன்பை எதிர்பார்ப்பது இயற்கையே. ஒரு தோழியாக நான் மகத்துக்கு அறிவுரை வழங்கினேன். நல்ல வேளை, தற்போது அனைத்து பிரச்சனையும் தீர்ந்துவிட்டது.

சண்டை

சண்டை

காமெடியாக எனக்கு வெஷ பாட்டில் என்று பெயர் வைக்கப்பட்டது. என்னால் யாரும் சண்டை போடவில்லை, மன அழுத்தத்திற்கு ஆளாகவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த வீட்டில் நிறைய வெஷ பாட்டில்கள் இருந்தது. ஒவ்வொரு நடிகையும் பெயருக்கும், புகழுக்கும் ஆசைப்படுவார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் அது எனக்கு கிடைத்துள்ளது என்றார் ஜனனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X