twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'விவேகம்' வெளியான தியேட்டர்களுக்கு நோட்டீஸ்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விவேகம்' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. சென்னை உட்பட பல இடங்களிலும் தியேட்டர்களில் ரசிகர்களின் ஆதரவோடு வசூல் அள்ளியது.

    'விவேகம்' படம் வெளியான முதல்நாள் முதலே கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது இந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதும், பிறகு கண்டுகொள்ளப்படாமல் போவதும் வாடிக்கையாகிவிட்டது.

    முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போது, முதல் 5 நாட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அரசாணை :

    அரசாணை :

    திரையரங்குகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து தமிழக அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநகராட்சிகளில் அதிகபட்சமாக ரூ.50, நகராட்சிகளில் ரூ.40,பேரூராட்சிகளில் ரூ.25, கிராமங்களில் ரூ.15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். பல திரைகள் கொண்ட மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.120 கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விதிமீறும் தியேட்டர்கள் :

    விதிமீறும் தியேட்டர்கள் :

    இந்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படுவது இல்லை. அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விவேகம்' திரைப்படத்துக்கு, விதிகளை மீறி எல்லா திரையரங்குகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பொதுநல வழக்கு :

    பொதுநல வழக்கு :

    விவேகம் படத்தைத் திரையிட்டு அதிக விலைக்கு டிக்கெட் விற்ற சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவராஜன் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று நடந்தது.

    நீதிபதி விசாரணை :

    நீதிபதி விசாரணை :

    அப்போது, 'தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க சிறப்புக்குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், ‘விவேகம்' திரைப்படத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு ஒரு நாளுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்க வேண்டும்' என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    தியேட்டர்களுக்கு நோட்டீஸ் :

    தியேட்டர்களுக்கு நோட்டீஸ் :

    மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதி இது தொடர்பாக தமிழக அரசு செப்டம்பர் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட 28 திரையரங்குகளும் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

    English summary
    Chennai court has issued notices to those theatres that charge more for Ajith starrer Vivegam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X