twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன் படத்தை ‘PS’ என குறிப்பிட வேண்டாம்..படக்குழுவுக்கு நோட்டீஸ்!

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் படத்தை 'PS' என குறிப்பிட வேண்டாம் என படக்குழுவினருக்கு இரு வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு உயிர் கொடுத்து திரையில் உயிரோட்டத்துடன் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

    நேற்று திரையரங்கில் வெளியான சரித்திர காவியத்தின் புகழ் பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

    ஆடம்பரமான விருந்து.. ரகரக உணவு.. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை.. பொன்னியின் செல்வனை விமர்சித்த கஸ்தூரி! ஆடம்பரமான விருந்து.. ரகரக உணவு.. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை.. பொன்னியின் செல்வனை விமர்சித்த கஸ்தூரி!

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன் நாவலை படித்து, கல்கியின் எழுத்தில் மெய்மறந்து போன ரசிகர்கள் படத்தையும், அந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரத்தையும் திரையில் காண ஆர்வமாக இருந்தனர். இதில், இளவரசனாக விக்ரம் ஆதித்த கரிகாலன் ரோலிலும், வந்தியத்தேவனான கார்த்தியின் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் உச்சுகொட்டி பார்த்து வருகின்றனர்.

    இரண்டாம் பாகம் எப்போ

    இரண்டாம் பாகம் எப்போ

    ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் கதை, அடுத்தடுத்து சுவாரசியமான ட்விஸ்டுடன் வேகம் எடுத்து நகர்கிறது. ஆதித்த கரிகாலன் விக்ரமின் தம்பி அருண்மொழி வர்மன் இலங்கைக்கு சென்று அந்நாட்டு அரசனை சிறை பிடிக்க முயலும் போது படம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. அப்போது சூடுபிடிக்க ஆரம்பித்த படம் கடைசி வரை அதிரிபுதிரியாக இருந்து. இரண்டாம் பாகத்தை பார்க்க ஏங்க வைக்கும்படி முதல் பாகத்தை முடித்திருக்கிறார் மணிரத்னம்.

    இணையத்தில் கொண்டாடிய ரசிகர்கள்

    இணையத்தில் கொண்டாடிய ரசிகர்கள்

    மேளதாள வாத்தியங்கள் முழங்க நேற்று திரையில் வெளியான படத்தை ரசிகர் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் நேற்று பொன்னியின் செல்வன் பீவர் ஏகத்திற்கும் எகிறிப்போய் இருந்த. பொன்னியின் செல்வன் படத்தை இணையத்தில் ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடினார்கள்.

    PS என குறிப்பிட வேண்டாம்

    PS என குறிப்பிட வேண்டாம்

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பிஎஸ் என விளம்பரப்படுத்த வேண்டாம் என படக்குழுவுக்கு கோவை வழக்கறிஞர்கள் கூட்டாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். பிஎஸ் என்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்துவ கூட்டமைப்பை குறிக்கும் வார்த்தை. மத ரீதியிலான போரை குறிப்பது போல் ஆகிவிடும் என்று கூறி தயாரிப்பாளர் சுபாஷ்சுரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர் விக்ரம், வினியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    English summary
    Coimbatore lawyers Notice to film crew not to refer to Ponniyin Selvan film as 'PS'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X