டான்ஸ் ஆடி மயங்கினால் உறவு கொண்டால் சரியாய்டும்.. 'மாதவன்' தரும் புது ட்ரீட்மென்ட்!!
சென்னை: ரொம்பப் புதுசாக இருக்கிறது மாதவனும் மலர்விழியும் படத்தின் கதையைப் பார்த்தால்.. இதுவரை இப்படிப்பட்ட ஒரு ட்ரீட்மென்ட்டை கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை.. மருத்துவ உலகினரே மலைத்துப் போகும் வகையிலான ஒரு புதுவிதமான 'ட்ரீட்மென்ட்'டை இந்தப் படத்தில் பரிந்துரைத்துள்ளனர்.
படத்தின் 2வது நாயகிக்கு வித்தியாசமான பிரச்சினை உள்ளதாம். அதாவது அவர் ஒரு நடனக்காரர். அதீதமாக டான்ஸ் ஆடினால் அவருக்கு மயக்கம் வந்து விடுமாம். அப்படி ஆகும்போது அவர் உடனே உடலுறவு கொள்ளவேண்டுமாம். இல்லாவிட்டால் உயிரே போய் விடுமாம்.
இப்படிப்பட்ட ஒரு தினுசான நோய் கொண்ட அந்தப் பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டி, உறவு கொண்டு காப்பாற்றுகிறாராம் ஹீரோ... எங்கேயாவது இப்படியாப்பட்ட வித்தியாசமான ட்ரீட்மென்ட்டைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அப்படித்தான் சொல்கிறது இந்தப் படத்தின் கதை.

விரட்டி விரட்டி
ஹீரோ அஸ்வின், ஹீரோயின் நீரஜாவைக் காதலிக்கிறார். சும்மா இல்லை, விரட்டி விரட்டி.. ஆனால் நீரஜாவோ அஸ்வினைக் கண்டு கொள்வதே இல்லையாம். இருந்தாலும் விடாமல் விரட்டித் தொடர்கிறாராம் அஸ்வின்.

நிற்க...
இங்குதான் 2வது ஹீரோயின் சிஜாரோஸ் என்ட்ரி கொடுக்கிறார். அவர் ஒரு நடன மாஸ்டர். அவரிடம் நீரஜா டான்ஸ் கற்க சேருகிறார். கூடவே அஸ்வினும் பின்னாடியே வந்து சேருகிறார்.

அதைச் சொல்லு...
சிஜா ரோஸ், கணவரை இழந்த இளம் விதவையாம். அவருக்கு டான்ஸ் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் கூடவே ஒரு பிரச்சினையும் திடீரென வந்து எட்டிப் பார்க்கிறது.

உயிரைக் காக்க உறவு...
அவருக்கு அதிக நேரம் ஆடினால் மயக்கம் வந்து விடுமாம். அப்போது ஒரு ஆணுடன் உடனே உறவு கொண்டு விட வேண்டுமாம். இல்லாவிட்டால் உயிரே போய் விடும் என்று ஒரு 'டாக்டர்' அவரை எச்சரிக்கிறாராம்.

கட்டுப்படுத்த முடியாமல்
ஒரு நாள் இப்படித்தான்.. தனியே டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறார் சிஜா. அப்போது அவருக்கு மயக்கம் வந்து விடுகிறது. அவரால் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லையாம். அந்த நேரம் பார்த்து கரெக்டாக அஸ்வின் வந்து சேருகிறார். அவரிடம் தனது பிரச்சினையை சொல்கிறார் சிஜா. பிறகென்ன, குருவைக் காக்க.. அவருடன் உறவு கொள்கிறார் அஸ்வின்.

அவள் ஒரு தொடர் கதை...
இது பின்னர் காதலாக மாறி விடுகிறது. இந்த நேரத்தில் தன்னைப் புறக்கணித்த நீரஜா தன்னை நோக்கித் திரும்புவதைப் பார்த்த அஸ்வின், அதை நிராகரிக்கிறார்.

எப்படியெல்லாம் ரோசனை வருதப்பா...
இப்படி டான்ஸ் ஆடி மயக்கம் வந்தால் உடனே உறவு கொள்ள வேண்டும் என்று எந்த ஊர் மருத்துவ சிகிச்சை பரிந்துரைக்கிறது என்று கூகுள் முதல் சாதாரண லிப்கோ டிக்ஷனரி வரை அத்தனை இடத்திலும் அலசிப் பார்த்தும் எங்கேயும் அப்படி ஒரு ட்ரீட்மென்ட்டைக் காணவே முடியவில்லை...சொல்ல மறந்துட்டோமே.. டைரக்டர் பெயர் மாசில்...
ரொம்பத்தான் நம்மவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் போல...!


Click it and Unblock the Notifications