கணவருடன் அமலா பால் ஜாலி முதல்.. கணவரிடம் தலையில் கொட்டு வாங்கும் கீர்த்தி சுரேஷ் வரை.. இன்றைய டாப் 5 செய்திகள்

சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல நடிகைகள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்த தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பல விஷயங்கள் பெரும் கவனத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இவை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

1. தெலுங்கு இயக்குநரை விளாசிய திவ்யபாரதி: தெலுங்கில் நடிகை திவ்யபாரதி நடித்த கோட் படத்தின் இயக்குநர் நரேஷ் குப்பிலி நடிகை திவ்யபாரதியை 'சிளக்கா' என்று தெரிவித்துள்ளார். இதைக் கண்டித்து திவ்யபாரதி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படப்பிடிப்புத் தளத்தில் பெண்களை மோசமாகவே பேசி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை கண்டித்த போது அமைதியாக இருந்த நடிகர் சுடிகாலி சுதீரையும் கடுமையாக விளாசியுள்ளார்.

2. ஏ.ஐ.யை பார்த்து பயப்படும் கீர்த்தி சுரேஷ்: தனது ரிவால்வர் ரீட்டா படத்தின் புரோமோசனின் போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கீர்த்தி சுரேஷ், ஏ.ஐ. தொழில்நூட்பம் கைகளை மீறி சென்று கொண்டுள்ளது. உண்மை எது பொய் எது என்று கண்டறிவதே சிரமமாக உள்ளது. எனது கணவருக்கு அனுப்பினால் அவர் எளிதில் கண்டுபிடித்து சொல்லிவிடுவார். இது பயத்தை தான் உருவாக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

November 20 Top 5 South Indian Heroines News Which Includes Amala Paul Keerthy Suresh and Nikki Galrani

3. கணவருடன் செம ஜாலி பண்ணும் அமலா பால்: நடிகை அமலா பால் தனது கணவர் தேசாய் உடன் இலங்கைக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ஆமைகள் மற்றும் மீன்களுடன் நீந்துவது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்துள்ளார். மேலும் டிரக்கிங் சென்ற, ஜீப் சவாரி சென்றது உள்ளிட்டவற்றையும் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

4. சாதி மதம் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராய்: கர்நாடகா மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராய், இங்கு ஒரே ஒரு மதம் தான் உள்ளது, ஒரே ஒரு இனம் தான் உள்ளது, அது மனிதநேயத்தின் மதம். இங்கே ஒரே ஒரு இனம்தான் உள்ளது, அது அன்பின் இனம். இங்கே ஒரே ஒரு மொழிதான் உள்ளது, அது இதயத்தின் மொழி. இங்கே ஒரே ஒரு கடவுள்தான் உள்ளார், அவர் எங்கும் நிறைந்தவர் என்று பேசி உள்ளார். இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

November 20 Top 5 South Indian Heroines News Which Includes Amala Paul Keerthy Suresh and Nikki Galrani

5. நிக்கி கல்ராணியின் திருமண வாழ்க்கை: நடிகை நிக்கி கல்ராணி நடிகர் ஆதி உடனான திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசுகையில், " எனது திருமண வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டுள்ளது. எனது கணவருடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் குடும்பம் கிடைத்ததற்கு நான் என்னை கொடுத்து வைத்தவள் என்று கருதுகிறேன். ஆதியின் குடும்பம் எனது குடும்பமாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார். நடிகைகள் குறித்த இந்த தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X