யார்… மிஸ் யூஸ் பண்றா... அண்ணாச்சியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பிரியங்கா !

சென்னை : பிக் பாஸ் வீட்டில் நாட்கள் செல்ல செல்ல வீட்டில் இருப்பவர்கள் இடையே மனகசப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று பிக் பாஸ் வீட்டில் அண்ணாச்சியின் தலைவர் பதவியை நிரூப் காயினை பயன்படுத்தி பறித்துக்கொண்டார்.

அண்ணாச்சியும் நிரூப்பும் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்தே மிகவும் ஒற்றுமையாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணாச்சியின் தலைவர் பதவியை நிரூப் பறித்ததால், அவர் மீது கோவத்தில் உள்ளார் அண்ணாச்சி.

கேப்டன் டாஸ்க்

கேப்டன் டாஸ்க்

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெறும். இந்த போட்டியில், பள்ளி டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட சிபி, அபிஷேக், இமான் அண்ணாச்சி போட்டியிட்டனர். இந்த டாஸ்கில் திறமையாக விளையாடி அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டின் தலைவரானார். ஆனால், நிரூப், தன்னிடம் இருந்த காயினை பயன்படுத்தி தலைவர் பதவியை தட்டி பறித்தார். இதனால் பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக நிரூப் இருக்கிறார்.

புது ரூல்

புது ரூல்

பிக் பாஸ் வீட்டின் தலைவர் என்ற முறையில், தன்னிடம் இருக்கும் நாணயத்தை அபிஷேக்கிடம் கொடுப்பதாகவும், பாவ்னியின் நாணயம் பிரியங்காவிடம் கொடுக்கப்படும், அந்தந்த ஏரியாவில் அவர்களின் ஆளுமை இருக்கும் என்று புது ரூலை போடுகிறார் நிரூப். இந்த புதிய ரூலை ஹவுஸ்மெட்டுகள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் வீட்டில் பெரிய வாக்கு வாதம் ஏற்படுகிறது.

மிஸ் யூஸ் பண்ணுவாங்க

மிஸ் யூஸ் பண்ணுவாங்க

தலைவர் பதவி பறிபோனதால் ஏற்கனவே கடுப்பாக இருந்த அண்ணாச்சி, நீ உன்னுடைய பவரை அபிஷேக்கிடம் மற்றும் பிரியங்காவிடம் கொடுத்தா அவங்க மிஸ் யூஸ் பண்ணுவாங்க நீ சொல்றதை எல்லாம் கேட்க முடியாது என்று கூறுகிறார்.

ஓபி அடிச்சீங்க

ஓபி அடிச்சீங்க

அண்ணாச்சியின் பேச்சால் கடுப்பான பிரியங்கா, யார் மிஸ் யூஸ் பண்ணுவா.. நாங்களா பண்ணோம். முதலில் நீங்க இந்த வீட்டில் என்ன வேலை செய்தீங்க என்று பாருங்க, எந்த வேலை கொடுத்தாலும் ஓபி அடிச்சிட்டு வேலையே செய்யாமல் இருந்தது நீங்கதான் என்று அண்ணாச்சியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அவரை திணறித்தார் பிரியங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X