தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நவம்பர் ஸ்டோரி!
சென்னை: இயக்குனர் இந்திரா சுப்பிரமணியன் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான வெப் தொடர் நவம்பர் ஸ்டோரி.
இதில் தமன்னா உட்பட ஜி.எம்.குமார், பசுபதி மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த வெப் சீரியஸுக்கு விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் ராகவன் இசை அமைத்துள்ளார்.

சுவாரசியமான கதை
கதையில் தமன்னாவின் தந்தை க்ரைம் நாவல் எழுத்தாளர் ஆவார். ஆரம்பத்தில் நடக்கும் ஒரு கொலையை போலீசார் விசாரிக்க தொடங்க அந்த குற்றத்தை செய்தவர் தமன்னாவின் தந்தை என சந்தேகம் எழுகிறது. இதை தமன்னா எதிர்கொண்டு தன் தந்தை நிரபராதி என்பதை நிரூபிப்பாரா!? இல்லையா!? போன்ற கேள்விகளுடன் கதை நகருகிறது.

வெற்றி பெற்றுள்ளது
7 எபிஸோடுகள் கொண்ட இந்த வெப் சீரியஸ் தமிழில் இதற்குமுன் ஹாட் ஸ்டாரில் வெளியான வெப் சீரியஸ்களை விட நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இயக்குனர் க்ரைம் ஸ்டோரியை சரியாக கையாண்ட விதம் வெற்றிக்கு சரியான வழி வகுத்துள்ளது.

பெரிய பக்கபலம்
இந்த வெப் தொடருக்கு நடிகர்களின் நடிப்பு பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. தமன்னா, பசுபதி, ஜி.எம்.குமார், விவேக் பிரசன்னா, அருள் தாஸ், நமிதா கிருஷ்ணமூர்த்தி, ஜான் பிரான்சிஸ் என முன்னனி கதாபாத்திரங்கள் முதற்கொண்டு அனைவரும் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளனர்.

முதல் முறையாக
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரியஸ் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இன்று இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. தமிழில் ஒரு வெப் சீரியஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.


Click it and Unblock the Notifications











