பிளாக்பஸ்டர் ஹிட்.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இந்த ஆண்டு மிகப்பெரிய வெப் தொடரே இதுதானாம்!

சென்னை: தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

இந்த ஆண்டு வெளியான வெப் தொடர்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று நாடு முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்களை ஈர்த்துள்ளதாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தெரிவித்துள்ளது.

இயக்குநர் ராம் சுப்பிரமணியம் (இந்திரா சுப்ரமணியம்) இயக்கத்தில் தமன்னா நடிப்பில் கடந்த மே 20ம் தேதி இந்த வெப் தொடர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் ஸ்டோரி

நவம்பர் ஸ்டோரி

அனந்த விகடன் குழு தயாரிப்பில் இயக்குநர் ராம் சுப்ரமணியம் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான இந்த நவம்பர் ஸ்டோரி கிரைம் த்ரில்லராக உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பசுபதி, ஜி.எம். குமார், அருள்தாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இந்த வெப் தொடரில் நடித்திருந்தனர். 7 எபிசோடுகளுடன் வெளியான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண்டின் சிறந்த தொடர்

ஆண்டின் சிறந்த தொடர்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான வெப் தொடர்களிலேயே இந்த ஆண்டின் தலை சிறந்த வெப் தொடராக நவம்பர் ஸ்டோரி மாறியுள்ளது. மில்லியன் கணக்கில் இந்த வெப்தொடரை ரசிகர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல எல்லைகளையும் கடந்து இந்த வெப்தொட்ர் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

சந்தோஷத்தில் தமன்னா

சந்தோஷத்தில் தமன்னா

நல்ல ஒரு படைப்புக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக நவம்பர் ஸ்டோரி திகழ்கிறது. பல்வேறு மொழி மக்களும் இந்த வெப் தொடரை பார்த்து அதன் கதையை பாராட்டி வருவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என இந்த தொடரில் லீடு ரோலில் நடித்துள்ள நடிகை தமன்னா கூறியுள்ளார்.

என் கனவு படைப்பு

என் கனவு படைப்பு

இயக்குநர் இந்திரா சுப்ரமணியம் எனும் ராம சுப்ரமணியம் நவம்பர் ஸ்டோரி தனது கனவு படைப்பு என்றும், தனது கனவை அப்படியே நிஜமாக்க இதில் பணியாற்றிய அத்தனை நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் கடும் உழைப்பை செலுத்தினர். அத்தனைக்கும் தற்போது மக்களிடம் இருந்து கிடைத்துள்ள வரவேற்பு சந்தோஷத்தை அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

என்ன கதை

என்ன கதை

ஞாபக மறதி நோயால் அவதிப்படும் பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் கணேசனின் மகள் அனுராதா, கொலை குற்றம் ஒன்றில் இருந்து தனது தந்தையை காப்பாற்ற போராடுவதும், அவரை எப்படி காப்பாற்றினார் என்பதுமே இந்த நவம்பர் ஸ்டோரி வெப் தொடரின் கதை. பிரேத பரிசோதனை மருத்துவராக நடிகர் பசுபதி அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பெஸ்ட் ஒடிடி

பெஸ்ட் ஒடிடி

தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், திரையரங்க அனுபவத்தை வீடுகளுக்கே கொண்டு வந்திருக்கிறது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளம். பூமி, மூக்குத்தி அம்மன், தி பிக் புல், தி ஃபால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்ஸ், ஃப்ரோஸன் 2, தி லயன் கிங், ஆர்யா, தி லெஜண்ட் ஆஃப் ஹனுமான், ஓகே கம்ப்யூட்டர், ஐபிஎல் என ரசிகர்களுக்கு உச்சகட்ட பொழுதுபோக்கு அனுபவத்தை கொடுத்து வருகிறது. தற்போது தமன்னாவின் நவம்பர் ஸ்டோரியும் டிஸ்னியில் சக்கைப் போடு போட்டு வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டுக்கான பிரத்யேக சந்தாக்களும் குறைந்த விலையில் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X