டிரெண்டாகும் NoVoteForTVK.. ரவுண்டு கட்டும் ரஜினி AK சூர்யா ரசிகர்கள்.. எல்லாம் ஃபேக் ஐடியா?

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என்று ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் என பலரும் இணையத்தில் மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய்யின் தவெகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று எக்ஸ் தளத்தில் NoVoteForTVK என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. இதனை ரஜினி, அஜித், சூர்யா ரசிகர்கள் அதிகம் செய்து வருகின்றனர். இதற்கு காரணமாக கூறப்படுவது விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் ரஜினி, அஜித், சூர்யா உள்ளிட்டோரையும் அவரது ரசிகர்களை மிகவும் மோசமாக விமர்சித்தது தான் என்றும் அதனை விஜய் கட்சி தொடங்கிய பின்னரும் தொடர்ந்து செய்து வந்ததும் தான் என்று கூறப்படுகிறது.

ரஜினி ரசிகர்: இப்படி இருக்கையில் இணையத்தில் ரஜினி ரசிகர் ஒருவர், " மக்களே மனசாட்சியோடு யோசிச்சு பாருங்க...
கரூர்ல செத்து இருக்காங்கன்னு சொல்லும் போது முகத்தைக் கூட காட்டாம போன விஜய்க்கா நீங்கள் ஓட்டு போட போறீங்க, NoVoteForTVK" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், " பெற்றோர்களை விஜய்க்கு ஓட்டு போடச் சொல்லி அடம் பிடியுங்கள் என்று விஜய் கூறியதால், எத்தனை குழந்தைகள் மிகவும் மோசமான மனநிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். இப்படியானவருக்கா வாக்களிக்கப் போகிறீர்கள். தயவு செய்து ஓட்டு செலுத்துவதற்கு முன்னர் நன்கு யோசித்து வாக்குச் செலுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யா ரசிகர்: அதேபோல் சூர்யா ரசிகர் ஒருவர், " சூர்யா மாதிரி ஒரு மனிதனுக்கு ரசிகரா இருந்துட்டு...விஜய் மாதிரியான நபருக்கு ஓட்டு போடுவதா ??...அப்படி வாக்குச் செலுத்தினால்,சூர்யா கற்றுத்தந்த அறத்திற்கு நாம் செய்யும் துரோகம் அது. சூர்யா ரசிகர்கள் யாரும் த.வெ.க வுக்கு ஓட்டு போட மாட்டோம் னு சபதம் எடுப்போம்...offlineலயும் இத பரப்புங்க என்று பதிவிட்டுள்ளார்.

NoVoteForTVK Trends Online Rajinikanth Ajith Kumar SK amp amp Suriya Fans Target Vijay TVK

AK & SK ரசிகர்கள்: அதேபோல் ஒரு இணைய வாசி, " என்ன ஆட்டம்டா போட்டிங்க..,மொத்தமா 23ம் தேதி இறக்குறோம், இப்படிக்கு அஜித்,ரஜினி,சூர்யா,கமல்,சிகா பேன்ஸ்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், " ஏப்ரல் 23 தட்ரோம் ! மே 4 தூக்றோம்" என்று பதிவிட்டு விட்டு, NoVoteForTVK என்றும் பதிவிட்டுள்ளார். இப்படியான பதிவுகளைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் இவையெல்லாம் போலியான கணக்குகள் மூலம், எதிர்கட்சியினர் பரப்பி வரும் தகவல்கள். ஆனால் ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவாகவே உள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X