twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வச்சாச்சு செக்.. இனி ஒடிடி தளத்திற்கும் சென்சார்.. ஆபாச காட்சிகள் இனி கத்தரிக்கப்படும்!

    |

    சென்னை: அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட ஒடிடி தளங்களும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

    இனி ஒடிடி தளத்தில் வெளியாகும் எந்தவொரு படமும் வெப்சீரிஸும் சென்சாரில் இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

    சென்சார் தடை இல்லாதாதால், சகட்டு மேனிக்கு ஆபாசத்தை கொட்டி வந்த ஒடிடி தளங்கள் எல்லாம் இனி அப்படி செய்ய முடியாத நிலை உருவாகும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுவும் லீக் ஆகிடுச்சா.. இன்னைக்கு நடக்கப் போற செங்கல் டாஸ்க்ல யார் ஜெயிக்கப் போறது தெரியுமா?இதுவும் லீக் ஆகிடுச்சா.. இன்னைக்கு நடக்கப் போற செங்கல் டாஸ்க்ல யார் ஜெயிக்கப் போறது தெரியுமா?

    நிர்வாணக் காட்சிகள்

    நிர்வாணக் காட்சிகள்

    நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜி5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ் பிளேயர் என ஏகப்பட்ட ஒடிடி தளங்கள் இயங்கி வருகின்றன. சினிமாவை போல ஒடிடி தளங்களுக்கு சென்சார் போர்டு இல்லாத நிலையில், ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகளும், ஆபாச படங்களும் வரிசைக் கட்டி வர ஆரம்பித்தன.

    மதத்துவேசம்

    மதத்துவேசம்

    மேலும், அதீத வன்முறை, மதத்துவேசம், ஆபாசம் என எல்லை மீறி ஏகப்பட்ட வெப்சீரிஸ்களும் படங்களும் ஒடிடி தளங்களில் வெளியாகி அதிகளவில் சர்ச்சைகளை கிளப்பின. இந்தியளவில் இது தொடர்பான ஹாஷ்டேக்குகளும் ஆல்ட் பாலாஜி, ULU போன்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளும் தொடரப்பட்டன.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்

    அடல்ட் படங்கள் என்றால், திரையில் திரையிடுவதற்கு முன்னதாக சென்சார் குழுவினர் அந்த படத்தை பார்த்து சோதனை செய்து, தேவையற்ற காட்சிகளுக்கு கட் கொடுப்பது வழக்கம். இதுவரை ஒடிடி தளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், தற்போது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் ஒடிடி தளங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மாற்றம் ஏற்படுமா?

    மாற்றம் ஏற்படுமா?

    ராவான கன்டென்ட்டுகளை இஷ்டத்துக்கு ஒடிடி தளத்தில் எடுத்து வெளியிடலாம் என நினைப்பவர்களுக்கு ஒரு சூப்பரான செக்காக இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால், வெப்சீரிஸ்களின் தரம் உயரவும், சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும் மாற்றமும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளிநாட்டு வெப்சீரிஸ்களுக்கு

    வெளிநாட்டு வெப்சீரிஸ்களுக்கு

    கேம் ஆஃப் த்ரோன்ஸ், பிரேக்கிங் பேட் என ஏகப்பட்ட வெளிநாட்டு வெப்சீரிஸ்களில் அதிகளவிலான ஆபாச காட்சிகளும், நிர்வாண காட்சிகளும் நிறைந்து உள்ளன. அது போன்ற, வெளிநாட்டு வெப்சீரிஸ்கள் மற்றும் படங்களுக்கும் இந்தியாவில் சென்சார் செய்யப்பட்டு ஸ்டார் மூவிஸ், எச்.பி.ஓ போன்ற டிவிக்களில் ஒளிபரப்பாவது போல ஆகுமா? இல்லை அப்படியே வருமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சீக்கிரமே விளக்குவார்கள்.

    English summary
    All OTT and streaming platforms like Netflix, PrimeVideoIN & other majors to come under government regulations. It will have a far reaching impact , as from now all series/films will come under I & B ministry and have to be censored.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X