»   »  மூணு படம் ப்ளாப் ஆனதும் தனுஷுக்கு மீடியா தேவைப்படுது!

மூணு படம் ப்ளாப் ஆனதும் தனுஷுக்கு மீடியா தேவைப்படுது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் பிரஸ், மீடியாவைச் சந்திப்பதில் தனுஷுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. ஆனால் சுள்ளானுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் மருமகனான பிறகு அவர் மீடியாவை முடிந்தவரை தவிர்த்தார்.

சமூக வலைத் தளமான ட்விட்டரில் தனுஷுக்கு கணிசமான ஃபாலோயர்கள் குவிந்ததும், மீடியாவே எனக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் அவர்கள் என்

Now Dhanush needs Media to promote Kodi

ட்விட்டர் பக்கத்திலிருந்து செய்திகளை எடுத்துக் கொள்ளட்டும் என்று வெளிப்படையாகவே சொன்னவர்தான். முன்னணி நாளிதழின் செய்தியாளரை வெளிப்படையாக ட்விட்டரில் திட்டினார்.

மாரி படம் நாளை வெளியாகிறது என்றால், அதற்கு ஒரு நாள் முன்பாகத்தான் அவர் மீடியாவைச் சந்தித்தார். அதுவும் ஒப்புக்கு. இதைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டபோது, ஏகத்துக்கும் கடுப்பானவர், தங்க மகன் படத்தின் போது மொத்தமாகவே புறக்கணித்தார்.

அடுத்து தொடரி. அந்தப் படமும் பாக்ஸ் ஆபீசில் மொக்கை வாங்கியது. குறிப்பிட்ட ஒரு வாரப் பத்திரிகைக்கு மட்டும்தான் அந்தப் படம் குறித்த பேட்டி கொடுத்தார்.

ஆனால் இந்த மூன்று படங்களும் சொல்லி வைத்த மாதிரி ப்ளாப் ஆகின பாக்ஸ் ஆபீஸில்.

அடுத்து தனுஷ் நடித்துள்ள கொடி வெளியாகிறது. தீபாவளிக்கு வரும் இந்தப் படத்தை பெரிய வெற்றிப் படமாக்க வேண்டும் எனக் கோரி மீடியாவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். வழக்கமான அந்த திமிர்ப் பேச்சு குறைந்து, பவ்யம் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.

ஆட்டுக்கு வாலை அளந்து வச்ச கதை இதுதான் போலிருக்கிறது!

English summary
After 3 consecutive flops Dhanush now needs the support of media to promote his Kodi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil