»   »  நான் வீட்டுக்கு போறேன், ஜூலி மாதிரியே அழுது அடம்பிடிக்கும் ஓவியா

நான் வீட்டுக்கு போறேன், ஜூலி மாதிரியே அழுது அடம்பிடிக்கும் ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் வீட்டுக்கு போகிறேன் என்று கூறி ஓவியா அழுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரையாவது அழ வைப்பதே வேலையாகிவிட்டது. முன்பு எதற்கெடுத்தாலும் ஜூலி நீலிக் கண்ணீர் வடித்தார். தற்போது ஓவியாவை அழவிடுகிறார்கள்.

இத்தனை நாட்கள் தைரியமாக இருந்த ஓவியா தற்போது எதற்கெடுத்தாலும் அழுகிறார்.

ஜூலி

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை நிற்க வைத்து யாரை வேண்டுமோ டைட்டா ஒரு அறை அறைய வேண்டும் என்று ஜூலி சொல்ல ஓவியா என்று கூறி சிரிக்கிறார் ரைசா.

ஓவியா

ஓவியா

ஜூலி கார்பெட் மீது நிற்க அதை பிடித்து இழுக்கிறார் ஓவியா. இதில் ஜூலி கீழே விழுகிறார். ஓவியாவின் இந்த செயலை பார்த்து பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அழுகை

அழுகை

எனக்கு சுய மரியாதை உள்ளது. இது போதும் நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறி அழுகிறார் ஓவியா. ஓவியாவும் கொடுத்த காசுக்கு நல்லாவே நடித்துள்ளார்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

சும்மாவே கூவுவாங்க இந்த ஓவியா ஆர்மிக்காரங்க, இந்த ப்ரொமோ வீடியோவை பார்த்த பிறகு சொல்லவா வேண்டும். யப்பா அந்த பொண்ணு காசுக்கு தான்பா நடிக்குது, அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

பரபரப்பு

பரபரப்பு

எப்பொழுதும் பார்வையாளர்களை பரபரப்பாக வைத்திருந்தால் தானே டிஆர்பி எகிறும். அதனால் தான் தினமும் ஒருவர் அழுது கொண்டே பேசுகிறார். இல்லை என்றால் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்கிறார். முன்னதாக ஜூலியும் இப்படித் தான் அழுது கொண்டே நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Namitha and Juliana, actress Oviya wants to go home from the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil