»   »  500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம்!

500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சம்ஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசம். அதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கம்பர் தமிழில் தந்தார்.

பின்னாட்களில் இந்த இதிகாசத்தை நாம் கதைகளின் மூலமாகவும் பல தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாகவும் பார்த்து ரசித்துள்ளோம். இப்போது ராமாயணம் பிரம்மாண்டத் திரைப்படமாக உருவாகவுள்ளது.

Now Rs 500 cr Ramayana on cards

பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றி பல தயாரிப்பாளர்களை இம்முயட்சியில் ஈடுபடவைத்துள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ராமாயணத்தை அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா, மது மந்தனா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளிவந்த மகதீரா படத்தை 50 கோடி பட்ஜெட்டில் அல்லு அரவிந்த் தயாரித்தார் (சிரஞ்சீவியின் மைத்துனர்) என்பது குறிப்பிடத்தக்கது.

நமித் மல்ஹோத்ரா ஏற்கனவே ப்ரைம் போகஸ் நிறுவனம் மூலம் ஸ்டார் வார்ஸ், ட்ரான்ஸபார்மர்ஸ் போன்ற படங்களின் ஸ்பெஷல் எபக்ட்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் இவரும் இணைத்துள்ளார். வரலாற்றுhd படங்களை அதிக பட்ஜெட்டில் உருவாக்க இதுவே சரியான தருணம் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

ராமாயணத்தை 3 டி- யில் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். மூன்று பாகமாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் படமாக்கவுள்ளனர். இயக்குநர் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கெனவே ரூ 1000 கோடி செலவில் மோகன்லாலை வைத்து மகாபாரதக் கதையை திரைப்படமாக்கப் போவதாக அறிவிப்பு வந்த நிலையில், அடுத்து ராமாயணமும் பிரமாண்ட படமாகிறது.

English summary
After the successful run of Baahubali franchise, Indian film industry is geared up to produce two more big-budget films Mahabharatha and Ramayana in mega budget.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil