'அந்த' இடத்தைப் பிடிக்க சிவாவுடன் மோதும் சந்தானம்!
Recommended Video

சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருமே ஒரு டிவி சேனலில் இருந்து வந்தவர்கள்தான். சிம்பு கொடுத்த வாய்ப்பால் சினிமாவுக்கு வந்தவர் சந்தானம். சிம்புவுக்கு போட்டியாக தனுஷ் கொடுத்த வாய்ப்பால் சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். சந்தானம் காமெடியனாக நடித்து இப்போது ஹீரோவாகி இருக்கிறார். சிவகார்த்திகேயன் இரண்டாவது படத்திலேயே ஹீரோவாகி உயரத்துக்கு போய்விட்டார்.
கேரியரைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயன் சந்தானத்துக்கும் மேலே ஏறிவிட்டார். ஆனாலும் இருவரையும் ஒப்பிட்டுப் பேசுவது தான் நடக்கிறது. அந்த ஒப்பீட்டை அப்படியே தொடர்வதற்காகவே சிவகார்த்திகேயன் படமான வேலைக்காரன் வெளியாகும்போது சந்தானம் தன் படமான சக்கப்போடு போடு ராஜாவை வெளியிடுகிறார். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ் வரிசையில் சிவா - சந்தானமும் சேரலாம்.

இந்த போட்டியில் சந்தானம் வென்றால் சந்தானத்தின் கை ஓங்கி விடும். சிவா - சந்தானம் போட்டியில் வெல்வது யார் என்று வரும் 22 ஆம் தேதி தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











