»   »  விஜய் சேதுபதிக்கும் ரஜினி படத் தலைப்பு மீது ஆசை வந்துடுச்சி!

விஜய் சேதுபதிக்கும் ரஜினி படத் தலைப்பு மீது ஆசை வந்துடுச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்தும் ஹீரோக்கள் லிஸ்ட்டில் அடுத்து சேர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி.

நானும் ரௌடிதான் படத்துக்குப் பிறகு இவர் கையெழுத்திட்டுள்ள புதிய படத்து ரஜினியின் சூப்பர் ஹிட் படமான தர்ம துரை தலைப்பைச் சூட்டியுள்ளனர்.

அஜீத், தனுஷ், விஷால், ஜீவா, கார்த்தி என பல ஹீரோக்கள் தொடர்ந்து ரஜினி படத் தலைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Now Vijay Sethupathy gets Rajini movie title

இப்போது கூட தனுஷ் தங்க மகன் என்ற தலைப்பை தனுஷ் தன் படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். போக்கிரிராஜா என்ற தலைப்பை ஜீவா தன் படத்துக்கு வைத்துள்ளார். ஜானி தலைப்பை ஜீவன் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தான் அடுத்து நடிக்கும் படத்துக்கு தர்ம துரை என்று தலைப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தை ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிக்கிறார். இதற்கு ஒரு சின்ன ப்ளாஷ்பேக் உள்ளது. ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் வசந்த குமாரன் என்ற படத்தில் நடிக்கவிருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் அது பெரிய பஞ்சாயத்தாகி, படமே கேன்சலாகிவிட்டது.

இப்போது நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இருவரும் ராசியாகிவிட்டனர்.

அதன் விளைவுதான் தர்ம துரை!

English summary
Now Vijay Sethupathy is also joining in the list of using Rajinikanth's super hit movie titles. His next movie has been titled as Darma Durai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil