விலகிக்கொண்ட ரஜினி... விரட்டும் விஜய்!
ரஜினியின் பிரம்மாண்டமான 2.ஓ படம் ரிலீஸாக இருந்த தீபாவளி நாளைப் பிடிக்க படக் குழுவை விரட்டி வருகிறாராம் விஜய்.
ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.ஓ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் இன்னும் பட வேலைகள் பாக்கி இருப்பதால் ஜனவரிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். எனவே அந்த தீபாவளி நாளில் தனது படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் விஜய்.

அட்லீ இயக்கத்தில் மூன்று வேடங்களில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பை துரிதப்படுத்தி வருகிறாராம் விஜய்.
சமீப ஆண்டுகளில் விஜய்க்கு தீபாவளிக்கு ரிலீஸான படங்கள் எல்லாமே ஹிட் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications