Movie Review: அட்லீ ஆட்டையப்போட்ட ஹாலிவுட் படம் எப்படி இருக்கு? எந்த ஓடிடி தளத்தில் இருக்கு? விபரம்!

சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் மெர்சல். இந்தப் படத்தில் அப்பா விஜய், இரண்டு மகன்களும் விஜய் என மொத்தம் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருப்பார். இவரது இயக்கம், விஜய்யின் நடிப்பு, ஏ.ஆர். ரகுமானின் இசை என ஒட்டுமொத்த படமுமே, தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்கு செமையான படமாக இருந்தது. வழக்கமாகவே, அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகின்றது என்றாலே அந்தப் படத்தை அட்லீ, எந்தப் படத்தில் இருந்து காப்பியடித்தார் என ரசிகர்கள் தேட ஆரம்பித்து விடுகின்றார்கள். அப்படி தெறி படத்தில் வரும் ஒரு விஜய்யின் கதாபாத்திரம் ஹாலிவுட் படமான, Now You See Me என்ற ஹாலிவுட் படத்தின் அட்டக் காப்பி எனலாம். இந்தத் தொகுப்பில் Now You See Me படத்தின் விமர்சனம் குறித்து காணலாம்.

ஹாலிவுட் படமான Now You See Me படத்தை இயக்கியவர் லூயிஸ் லெட்டாரியர். மோர்கன் ஃப்ரீமேன், மைக்கேல் கெய்ன், டேவ் பிராங்கோ, இஸ்லா பிஷர், மெல்னி லாரண்ட், உட்டி ஹாரெல்சன், மார்க் ருஃபாலோ, ஜெஸ்ஸி ஐசன்பெர்க் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் மேஜிக் கலைஞர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

now you see me ott review movie review

Now You See Me: நான்கு மேஜிக் கலைஞர்கள் உள்ளார்கள். இவர்கள் நான்கு பேரும் இணைந்து, மக்களை ஏமாற்றி பணம் சேர்த்த வங்கி, இன்ஸுரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து எப்படி பணத்தை மீட்டு மக்களிடம் கொடுக்கின்றார்கள். இவர்கள் மேஜிக் என்ற பெயரில் மக்களுக்கு பணத்தை திரும்பி வழங்குகின்றார்கள். அதுவும் பணத்தை இருந்த இடத்தில் இருந்து கொண்டே கொள்ளை அடிக்கின்றார்கள். இது எப்படி நடைபெறுகின்றது. இவர்களை தடுக்க காவல்துறை என்னவெல்லாம் செய்தது? இவர்களைத் தடுத்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

now you see me ott review movie review

திரைக்கதை: படத்தின் திரைக்கதையைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் இவர்களை கைது செய்த பின்னர், விசாரணையின்போது, இவர்கள் நான்கு பேரும் செய்யும் மேஜிக் காட்சிகள் எல்லாம், அட்டகாசமானவை. இவர்களுக்கு என ஒரு ப்ளான் உள்ளது. அதன்படி இவர்கள் நான்கு பேரும் மக்களிடம் ஏமாற்றப்பட்ட பணத்தை, மக்களுக்கு கொடுக்கும் வேலையைச் செய்கின்றார்கள். நான்கு பேரில் ஒருவர், காவல்துறை துரத்தும்போது ஏற்படும் விபத்தில் இறக்கின்றார். அப்போது, அவர்களின் அடுத்த திட்டம் என்னவென்று காவல்துறைக்கு தெரிந்து விடுகின்றது. இதனால் மற்ற மூவரும் இணைந்து தங்களது ப்ளானை எப்படி முடித்தார்கள் என்பதெல்லாம் படத்தில் பார்க்கும்போது அமர்க்களம். க்ளைமேக்ஸில் படத்தில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட், நம்ம ஊரு மங்காத்தா படத்தைப்போல் சிறப்பாக உள்ளது.

now you see me ott review movie review

ஓடிடி: ஹாலிவுட் படத்திற்கே உரித்தான ஒளிப்பதிவு, பின்னணி இசை, காட்சி நேர்த்திகள் என படம் முழுக்க முழுக்க பக்காவான கமர்ஷியல் படமாக உள்ளது. அமேசான் பிரைமில் உள்ள இந்தப் படம், ஐ.எம்.டி.பி-யில் 7.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்தப் செம ஹிட் அடித்ததால், இந்தப் படத்தில் அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளது. இதுவரை இந்தப் படத்தில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. குடும்பத்தோடு பார்க்கலாம். எந்தவிதமான 18+ காட்சிகளும் இல்லை.

now you see me ott review movie review

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X