twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருப்பதிக்குப் போய் புருவத்தையும் சேர்த்து மொட்டையடிச்ச மாதிரி இருக்கு இசையுலகம்! - இளையராஜா

    By Shankar
    |

    இசையுலகில் இன்றைக்கு இசையமைப்பாளர்களே இல்லாத நிலை உருவாகிவிட்டது என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் இளையராஜா.

    நேற்று பேஸ்புக் நேரலையில் இளையராஜா பேசியதாவது:

    "நான் இசையமைத்த நாற்பது வருட காலமும்... எல்லாம் நடந்து முடிந்து... 'முடிந்துவிட்டது'.

    இனிமேல் முழு இசைக் கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர்களுடன் பாடி.. இசையமைத்து ஒலிப்பதிவு செய்வதென்பது.. இந்த உலகில்.. இந்தப் பேரண்டத்தில் நடக்கப் போவதில்லை! அந்த காலகட்டம் முடிந்துபோய்விட்டது!

    சிரிக்கவேண்டிய விஷயம் இல்லை இது ! Musicians இல்லன்னு அர்த்தம்! Music போட்றவங்க இல்ல.. Music வாசிக்கிறவங்க இல்ல.. பாடுறவங்க இல்ல.. சும்மா ஏதோ பண்ணிட்டு இருக்கோம்... சினிமாவுல வந்து கையக் கால ஆட்டுறா மாதிரி... Fight பண்றவன் Fight'டா பண்றான்?

    அது மாதிரி இங்க பாடுறவனும் பாடப்போறதில்ல. ஏன்னா Tune இல்ல. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது.. எத்தனை ராகங்கள்.. எத்தனை கலப்புகள்.. எவ்வளவு வாத்தியக்கருவிகள் ! வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனையான பாவங்கள் ! எத்தனை உணர்வுகள்! எத்தனை Emotions ! எல்லாம் போயிடுச்சு !

    திருப்பதிக்குப் போயிட்டு மொட்டை அடிச்சுட்டு வந்தா மாதிரி இருக்குது இப்போ! புருவத்தையும் சேர்த்து மொட்டை அடிச்ச மாதிரி இப்போது இசையுலகத்தில் Musicians கிடையாது என்று ஆயிடுச்சு !"

    இளையராஜா பேசிய பிறகு, அவருடன் பணியாற்றிய இசைக் கலைஞர்கள், தங்களின் இசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

    English summary
    Maestro Ilaiyaraaja says that nowadays there is no musicians in music industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X