Vijay: விஜய்யை சீமான் பொளப்பார்.. அது நடந்தே தீரும்.. முக்கியப்புள்ளியின் விளக்கத்தால் பகீர்!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தினைத் தொடங்கியபோது அவருக்கு வரவேற்புகள் இருந்தது. ஆளும் கட்சியான திமுக அமைச்சர்களே வரவேற்பதாகத்தான் கூறினார்கள். விஜய் கடந்த வாரத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார். அதுவரை விஜய்யை தனது தம்பி என்று அழைத்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெகவின் முதல் மாநில மாநாட்டிற்குப் பின்னர் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். இது விஜய் ரசிகர்களை மட்டும் இல்லாமல், தவெக தொண்டர்களையும் கோபப்படுத்தியுள்ளது. இதற்கு அவர்கள் எதிர்வினையாற்ற, நாம் தமிழர் கட்சியில் முக்கிய அங்கம் வகிக்கக் கூடிய துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் அரசியல் நடவடிக்கை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, லாரியில் அடிப்பட்டுச் செத்துப்போவாய் எனக் கூறியது விஜய் ரசிகர்களை ரொம்பவும் காயப்படுத்தியது மட்டும் இல்லாமல், கோபமூட்டிவிட்டது. இப்படியான நிலையில், விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் சீமானுக்கு எதிராக தங்களது எண்ணங்களையும் கோபங்களையும் வெளிப்படுத்து வருகின்றனர்.

மேலும் சீமான் பேசும்போது, " ப்ரோ இட்ஸ் ராங்க் ப்ரோ, திராவிடமும் தமிழ்தேசியமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? என மேடையில் கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் நேற்று அதாவது நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒன்று கொள்கையை மாற்று இல்லை என்றால் எழுதிக் கொடுப்பவனை மாற்று" என ஒருமையிலும் பேசினார். இதுவும் தவெக தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் கோபத்தினை அதிகரித்தது.

ட்ரெண்ட்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானே விஜய்யை மிகவும் மோசமாக தாக்கிப் பேசியதால், இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட இணையவாசிகளும் நாம் தமிழர் கட்சியினரும் விஜய்க்கு எதிராக மிகவும் மோசமான பதிவுகளை இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர். அதேபோல் விஜய் ரசிகர்களும் சீமானுக்கு எதிராக இணையத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர்.

கோட் பட கதை: இப்படி இருக்கும்போது, நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் துரைமுருகன் சீமான், விஜய்யின் மாநாட்டிற்கு முன்னர் விஜய்யை அரவணைத்து பேசிவிட்டு, மாநாட்டிற்குப் பின்னர் இவ்வாறு தாக்கிப் பேச என்ன காரணம் எனத் தெரிவித்துள்ளார். அதாவது, அவரது பதிவில், " தான் ஆசையாய் வளர்த்த பிள்ளை காணாமல் போகிறது அதனால் குடும்பத்திற்குள் குழப்பம் வருகிறது 20 ஆண்டுகள் கழித்து காணாமல் போன மகன் கிடைக்கிறான் மகிழ்ச்சியில் குடும்பமே கொண்டாடுகிறது

பொளப்பார்: ஆனால் வந்தவன் ஆளே மாறி வந்திருக்கிறான் என்பது போகப் போகப் தெரிகிறது அவனை இயக்குகிறவன் தவறான கதைகளை சொல்லி தன் குடும்பத்திற்கு எதிராகவே அவனை வளர்த்துள்ளான் என்பது அப்பாவிற்கு தெரியவர அப்பா அவனை போட்டுத் தள்ளுகிறார் ! நடிகர் விஜய்யின் GoAt படத்தில் தன் மகனை தவறானவன் என தெரிந்தவுடன் விஜய் எப்படி பொளந்தாரோ அப்படித்தான் நிஜத்தில் தம்பியாக நினைத்தவர் தவறான அரசியலை கையிலெடுத்தவுடன் அண்ணன் சீமானும் பொளக்கிறார் ! That's all bro !" என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு நாம் தமிழர் கட்சியினர் வட்டாரத்தில் வரவேற்பையும், தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











