Vijay: விஜய் செய்றது பூமர்தனமா இருக்கு.. யூடியூபர் இப்படி இறங்கி அடிக்கிறாரே! என்ன விசயமா இருக்கும்?

சென்னை: பொதுவாக மக்களின் புழக்கத்தில் ஒரு பழமொழி உள்ளது, அதாவது, " கல்லடி பட்டாலும் பரவாயில்லை, சொல்லடி மட்டும் படக்கூடாது" என்பதுதான் அது. ஆனால் பொதுவாழ்க்கைக்குள் வந்துவிட்டாலோ அல்லது மக்களால் அடையாளப்படுத்தப்படும் இடத்திற்கு வந்துவிட்டால், சொல்லடியை தாங்கித்தான் ஆகவேண்டும். அதுவும் அரசியல் களத்தில் களமிறங்கிவிட்டால் தினம் தினம் என்பதை விடவும், மணிக்கு பலமுறை சொல்லடி படவேண்டும். அப்படியான நிலைக்கு ஆளாகியுள்ளார் நடிகர் விஜய். அப்படி விஜய்யை பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மிகவும் காட்டமாக விமர்சித்து வருகின்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தினைத் தொடங்கியபோது, விஜய்க்கு அனைத்து அரசியல் தலைவர்களும் அரசியல் நாகரீகத்தினால் வாழ்த்து தெரிவித்தார்கள். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருவதால் பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். அப்படியான நிலை கடந்த மாதம் தனது முதல் மாநில மாநாட்டினை நடிகர் விஜய் நடத்தி முடித்த கணத்தில் இருந்தே, அவர் மீது பெரும்பாலான கட்சியைச் சார்ந்தவர்கள் (அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர) சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

vijay thalapathy vijay

குறிப்பாக விஜய்யின் முதல் அரசியல் கன்னிப்பேச்சானது தனது தொண்டர்களையும் தனது கட்சியையும் என்ன மாதிரியான அரசியல் பாதையில் வழிநடத்தப்போகின்றார் என்பது குறித்தும் அமைந்திருந்தது. மேலும் முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் ஆகிவிடவேண்டும், முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணவோட்டமும் காணப்பட்டது. ஆளுகின்ற திமுக, பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் பல கட்சியினரை நேரடியாக இல்லாமல், மறைமுகமாக அட்டாக் செய்திருந்தார்.

பூமர்: இப்படியான நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தொடங்கி, இரண்டாம் நிலைத் தலைவர்கள் வரை விஜய்யை சரமாரியாக விமர்சித்து வருகின்றார்கள். அந்தவகையில் தமிழ்நாட்டினை இதற்கு முன்னர் ஆட்சி செய்த கட்சிகள் செய்த ஊழல்களை விஜய் பட்டியலிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக பிரபல யூடியூபரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், " திமுகவின் ஊழல்களை பட்டியலிடும் விஜய் ! ஆமா இவரு பெரிய விஜிலென்ஸ் ஆபிசர் புதுசா வந்து கண்டுபிடிக்க போறாரு ! அந்த ஊழல் பணத்தில் பீஸ்ட் படம் வரைக்கும் சம்பளம் வாங்கும்போது தெரியலையா? பூமர்தனமா இருக்கு ப்ரோ" எனக் குறிப்பிட்டுள்ளார்.

vijay thalapathy vijay

விமர்சனம்: இவரது இந்தப் பதிவுக்கு விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் என பலரும் எதிர்வினையாற்றி வருகின்றார்கள். இதுமட்டும் இல்லாமல் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் பக்கத்தில் விஜய்யை விமர்சித்து தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றார். அதேபோல் நாம் தமிழர் கட்சியில் இருக்கும், இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யை விமர்சித்து வருகின்றார்.

அதிமுக: குறிப்பாக " தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான தங்கை ஸ்னோலினின் தாயார் அம்மா வனிதா அவர்கள் சகோதரர் விஜய்யின் தவெகவில் இணைந்த செய்தியைக் கண்டேன். அம்மாவின் அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகளும், அன்பும்! அதேசமயம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய அதிமுகவை, எடப்பாடி பழனிச்சாமியை இன்றளவும் சகோதரர் விஜய்யும், அவரது இயக்கமும் விமர்சிக்க மறுப்பதும், 'அதிமுகவுடன் கூட்டணியின் இணைந்தால் பயனளிக்குமா?' எனும் யோசனையில் சகோதரர் விஜய் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது" எனக் குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

vijay thalapathy vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X