Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
8 ஆண்டு காதல்.. கமல் தலைமையில் காதலியை கரம் பிடித்த சினேகன்.. டிவிட்டரில் வாழ்த்து கூறிய சீமான்!
சென்னை: நேற்று திருமணம் முடித்த பாடலாசிரியர் சினேகனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
கவிஞர், நடிகர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர் சினேகன். தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள சினேகன் இதுவரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சினேகன் நேற்று தனது காதலியான சின்னத்திரை நடிகை கன்னிகாவை சீர்திருத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
நீங்க மட்டும் ஏன் டைனமிக் திருமணம் பண்ணல? பழைய வீடியோக்களை பகிர்ந்து சினேகனை விளாசும் நெட்டிசன்ஸ்!

கமல் தலைமையில் திருமணம்
இந்த திருமணம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா உட்பட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சினேகனுக்கு சீமான் வாழ்த்து
இதனை தொடந்து நேற்று இரவு சினேகன் - கன்னிகா திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கவிஞர் சினேகனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டரில் திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறம் கொண்ட வாழ்வினாய்
அவர் தெரிவித்திருப்பதாவது, என்னுயிர் தம்பி பெரும்புகழ் கவிஞர் சினேகன், அவர்கள், தன் வாழ்வின் உயிர்துணையாக கன்னிகா ரவி அவர்களை ஏற்று, இனிதே இணைந்துள்ள மணவாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று, அன்புடை நெஞ்சமாய், அறம் கொண்ட வாழ்வினாய், இன்புற்று பல்லாண்டு வாழ பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன். மணமக்கள் நீடு வாழ்க! என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
சீமானின் இந்த வாழ்த்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நெட்டிசன், மணமக்கள் சகல செளபாக்கியங்களோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.

ஏன் டைனமிக் திருமணம் பண்ணல?
இன்னும் பலர் ஏன் டைனமிக் திருமணம் செய்யவில்லை என்று கேட்டு வருகின்றனர். இந்த நெட்டிசன், ஊருக்கெல்லாம் Dynamic திருமணம் செஞ்சு வச்ச சினேகன், தன் திருமணத்தை மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை? என கேட்டுள்ளார்.