"என்.டி.ஆர் பயோபிக்"... பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன்!

என்.டி.ஆர். பயோபிக் படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வித்யாபாலன்.

சென்னை : பிரபல தெலுங்கு நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் என்.டி.ராமாராவ்வின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்க இருக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ், இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர் . இவரது வாழ்க்கை வரலாறு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

"என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தன் தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.

மனைவி கதாபாத்திரம்:

மனைவி கதாபாத்திரம்:

இந்நிலையில், இப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. முதலில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலன் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முக்கியத்துவம்:

முக்கியத்துவம்:

பின்னர், படத்தின் இயக்குனர் தேஜா நேரில் மும்பை சென்று முழு கதையையும் அவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொண்டு, இப்படத்தில் நடிக்க வித்யாபாலன் சம்மதித்துள்ளார்.

நெகடிவ் கேரக்டர்?

நெகடிவ் கேரக்டர்?

என்.டி.ஆரின் மனைவி வேடம் என்றாலும், அவரை எதிர்த்து செயல்படும் வேடம் என்று கூறப்படுகிறது. வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது.

என்.டி.ஆர் பயோபிக்:

என்.டி.ஆர் பயோபிக்:

தொடர்ந்து கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து வித்யாபாலன் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் பல படங்களில் நாயகியாக நடிக்க இருப்பதாக அவரது பெயர் அடிபட்டது. ஆனால், இதுவரை அவர் எந்த நேரடி தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. எனவே, "என்.டி.ஆர் பயோபிக்" தான் வித்யாபாலன் தென் திரையுலகில் நடிக்கும் முதல்படம் ஆகும்.

வெங்கையா நாயுடு:

வெங்கையா நாயுடு:

கடந்த மார்ச் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கிளாப் போர்டு அடித்து இப்படத்தின் முதல் காட்சியை ஹைதராபாத்தில் தொடங்கி வைத்தார்.

மருத்துவமனை:

மருத்துவமனை:

கடந்த 1943ம் ஆண்டு பசவதாரகத்தை மணந்தார் என்.டி.ஆர். இந்தத் தம்பதிக்கு எட்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பசவதாரகம் கடந்த 1985ம் ஆண்டு காலமானார். அவரது மறைவிற்குப் பின், அவரது பெயரில் பசவதாரகம் இந்தோ அமெரிக்கன் கேன்சர் மருத்துவமனையை ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X