கதாநாயகுடு: செம, மாஸ், ஹிட்: ட்விட்டர் விமர்சனம் #NTRKathayanakudu
ஹைதராபாத்: கதாநாயகுடு படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதாநாயகுடு என்ற பெயரில் படமானது. க்ரிஷ் இயக்கிய படத்தில் பாலகிருஷ்ணா தனது தந்தை என்.டி.ஆர். ஆக நடித்தார். அவரின் மனைவியாக வித்யா பாலன் நடித்தார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கதநாயகுடு இன்று ரிலீஸாகியுள்ளது. படம் குறித்து ட்விட்டரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.
என்.டி.ஆர்.
கதாநாயகுடு படத்தில் பாலகிருஷ்ணா தனது தந்தையாகவே மாறிவிட்டார் என்கிறார்கள் ரசிகர்கள்.
ஹிட்
கதாநாயகுடு படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இது படம் அல்ல வரலாறு. நிச்சயம் ஹிட் தான் என்கிறார்கள்.
பிளாக் பஸ்டர்
கதாநாயகுடு படத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டாராம். படம் பிளாக் பஸ்டர் தான்.
வித்யா பாலன்
கதாநாயகுடு படத்தில் பாலகிருஷ்ணாவும், வித்யா பாலனும் அருமையாக நடித்துள்ளார்கள்.
படம்
கதாநாயகுடு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். #NTRKathayanakudu


Click it and Unblock the Notifications











