'பூமியோட தாய்ப்பால் குடிச்சவன், புரட்சியா எழுந்தவன், காட்டுக்கரும்புலி' ஜூனியர் என்டிஆர் மிரட்டல்!

By

சென்னை: இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் பர்ஸ்ட் லுக் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கி வரும் பிரமாண்ட படம், இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்).

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர். தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் உருவாகிறது.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கைக் கதையை கொண்டு புனையப்பட்ட படம் இது. சுமார் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். இந்தி நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உட்பட பலர் நடிக்கின்றனர்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

ஹாலிவுட் நடிகர் ரேய் ஸ்டீவன்சன், ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆகியோரும் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

மீண்டும் தொடங்கியது

மீண்டும் தொடங்கியது

ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போது லாக்டவுனில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியது. ஷூட்டிங் தொடங்கியதற்கான அசத்தல் வீடியோவை படக்குழுவினர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.

பீம் ஆக என்டிஆர்

பீம் ஆக என்டிஆர்

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் பீம் கேரக்டருக்கான டீஸர் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தனர். அதன்படி, பீம் கேரக்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராஜமவுலி இப்போது, பீம் ஆக என்டிஆர் லுக்கை வெளியிட்டு மிரட்டி இருக்கிறார்.

காட்டுக் கரும்புலி

அடர்ந்த காட்டுக்குள் தனது முறுக்கேறிய உடலை காட்டியபடி ஓடுவது, கட்டப்பட்டிருக்கும் இரும்பு சங்கிலியை இழுப்பது என அசத்தலாக இருக்கிறது வீடியோ. அவன் எதிரில் நின்னா கடற்புயலே அடங்கும். பெயரைச் சொன்னா சிகரத்துக்கே தொடை நடுங்கும். அவன் இதயத்துடிப்பு கொடியோட படபடப்பு. அவன் பூமியோட தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தவன்.. அவன் என் தம்பி, அவன் காட்டுக் கரும்புலி ' என ராம் சரண் குரலில் வசனம் தெறிக்கிறது.

விஷூவலும் இசையும்

விஷூவலும் இசையும்

ஜூனியர் என்.டி.ஆர். ஆவேசமாக என்ட்ரியாகும் விஷூவலும் பின்னணி இசையும் ஆச்சரியப்படும் விதமாக இருக்கிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர், இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

ஒலிவியா மோரிஸ்

ஒலிவியா மோரிஸ்

இந்தி நடிகை நடிகை ஆலியா பட், அடுத்த மாதம் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ் ஆகியோரும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக ஆர்ஆர்ஆர் டீம் தெரிவித்துள்ளது. படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X