சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு எச்சரிக்கை விடுத்த என்.டி.ஆர் மனைவி!
ஐதராபாத் : மறைந்த நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கை கதையில் உருவாகும் படம் லக்ஷ்மி'ஸ் என்டிஆர். சர்ச்சைக்குப் பெயர்போன இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கும் இந்தப் படத்தில் என்.டி.ஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு 'லக்ஷ்மி'ஸ் என்.டி.ஆர்' என்ற தலைப்பில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது அதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார் நாயகனான பாலகிருஷ்ணா.

இருப்பினும் என்.டி.ஆரின் வாழ்க்கையில் லக்ஷ்மி பார்வதி சென்றதில் இருந்தே கதை தொடங்குவதாகச் சொல்லி அவரை சமாதானம் செய்தார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
இந்த நிலையில், தற்போது லக்ஷ்மி பார்வதி, அந்தப் படம் குறித்து ராம்கோபால் வர்மாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், என்.டி.ஆரின் வாழ்க்கைக் கதையில் உருவாகும் படத்தை வரவேற்கிறேன்.
அதேசமயம், அந்தப் படத்தில் உண்மை அல்லாத விஷயங்களைத் திரித்து வெளியிட்டால், நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதெல்லாம் ராம் கோபால் வர்மாவுக்கு புதுசா..?


Click it and Unblock the Notifications











